பக்கம்:புது வெளிச்சம்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெயப்பொருள் விளக்கம்


  • கவிஞர் புவியரசு

புரட்சிக் கவிஞராய்ப் புறப்பட்ட வெள்ளியங்காட்டான் அவர்களின் இன்னொரு பரிமாணம் இந்த நூல். மதப் போர்வை போர்த்துக் கொண்டு உலவும் பல புராதனச்சொற்களுக்கு மதச் சார்பற்ற, கடவுள் சார்பற்ற, புதிய விளக்கங்களை, உண்மையான தத்துவ விளக்கங்களை, கவிஞர் தமது வடமொழிச் சாத்திரப் புலமை கொண்டு இந்நூலில் விளக்கியிருக்கிறார்.

இதுவரை சமயச்சார்பாகவே பார்த்து உணர்ந்து பழக்கப்பட்டவர்களுக்கு இப்புதிய மெய்விளக்கம் அதிர்ச்சி தருவதாகச் கூடத் தோன்றலாம். ஆனால், கவிஞர் உயர்த்திப் பிடிக்கும் மெய்விளக்கின் முன்னே, பல்லாயிரம் ஆண்டின் பொய்மை இருள் பறந்தோடிப் போய்விடுகின்றது.

'ஒம் தத் சத்’ என்பது நாம் அடிக்கடி கேள்விப்படும் ஒன்றுதான். எதையறிந்தால் எல்லாம் அறிந்ததாகுமோ, அல்லது எல்லா நூல்களிலிருந்தும் எதுவொன்றே அறியத் தகுந்ததாகுமோ அதுவே ஒம் தத் சத்' என்று பூச்சுகளற்ற மெய்ப்பொருளை உணர்த்துகிறார் கவிஞர்.

'உள்ளத்துக்குப் புறம்பாக எந்தவொரு தெய்வமும் இல்லை', என்பது ஆசிரியரின் தெளிவு. மனிதரும், விலங்குகளும், பறவைகளும், புழுப் பூச்சிகளும், தாவர வர்க்கமும் சும்மா அழிந்து போவதில்லை. தம்மைப் போல் சிலவற்றைப்

iv

கவிஞர் வெள்ளியங்காட்டான்