பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 புது வெள்ளம் -ञ्ज

வென்றன். கடலின் ஆழத்தையும் பரப்பையும் அலை யையும் கண்டு அஞ்சாமல் அவை தன் பின்னே செல்ல, கடலில் முன்னேறிப் பகைவரை வென்ருன். கடல் அவனுக்குத் தடையாக நிற்கவில்லை. அது புறங்காட்டி ஒடும் பகைவனைப் போலச் செங்குட்டுவனது மரக் கலங்கள் செல்ல வழிவிட்டது. ஆதலின் கடலைப் பிறக்கிடும்படி ஒட்டினவன் என்ற சிறப்பைச் சேரன் பெற்ருன்.

கடலை வென்றதுதான் இந்தப் போரின் தனிச் சிறப்பு ஆதலின், இந்தப் போர் முடிந்தவுடன் செங்குட்டுவனைப் புலவர்கள் கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன்' என்று பாராட்டத் தொடங்கினர்கள். செங்குட்டுவனது ஆணைக்கும் ஆற்றலுக்கும் கடலே பணிந்து புறங்காட்டியதாகப் புகழ்ந்து பாடினர்கள்.

இத்தகைய புகழையுடைய சேரன் செங்குட்டுவ ளிைடம் பரணர் வந்தார். சில நாட்கள் தங்கினர். சேர மானுடைய வெற்றிச் சிறப்பைப் பலர் கூறக் கேட்டுக் களித்தார். அவனுடைய ஈகைச் சிறப்பைத் தாமே நேரில் கண்டு களித்தார். மன்னனைப் பாராட்டிப் பத்துப் பாடல்கள் பாடினர். இந்தப் பத்தும் பதிற்றுப் பத்தில் ஐந்தாம் பத்தாக இருக்கின்றன.

கெடலரும் பல்புகழ் * செங்குட்டுவன் திருவோலக்கத்தில் வி ற்றிருந் தான். அவன் புகழ் பாரதநாடு முழுவதும் பரவி யிருந்தது. ஆதலின் பல நாடுகளிலிருந்து அவனைப் பார்க்கும் பொருட்டு மக்கள் வந்திருந்தார்கள். தமிழ் நாட்டில் உள்ள சோழ பாண்டிய மண்டலங்களி