பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viji புது வெள்ளம்

யுள்ளது. நெற்றிப் பட்டமும் அம்பாரியும் பெற்று விளங்குவது.

'குதிரைப் படையை எண்ணிப் பார்ப்பது இயலாத செயல் என்று ஒரு புலவர் சொல்கிருர்,

மறவர்கள் எத்தகைய பகைவர்களேயும் நேரே கின்று போர் செய்து வெற்றி காணும் திறத்தினர்கள். யானேயை வேலால் எறிந்து கொல்கிருர்கள். அவர்கள் விடும் அம்பு மிக்க வேகமாகச் சென்று இலக்கை அடிக்கின்றன. அதனால், கதழ்தொடை மறவர் என்று அவர்களே ஒரு புலவர் பாராட்டுகிருர். அவர்கள் எந்த இடையூறு வந்தாலும் முன் வைத்த காலப் பின் வைக்க மாட்டார்கள்; புறங்காட்டி ஓடாத உறுதியை உடையவர்கள். அவர்களுடைய பழைய வெற்றிகளே அவர்கள் காலிலே அணிந்திருக்கும் வீரக் கழல்கள் தெரிவிக்கின்றன.

கடற் போரைப் பற்றிய செய்திகளால் போர் செய்வ தற்கு ஏற்ற வகையில் கப்பல்கள் அக் காலத்தில் இருந் திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. உன்னம் என்ற மரத்தைக் கொண்டு அரசனுடைய வெற்றி தோல்வி களே உணர்ந்து கொள்ளும் வழக்கம் பழைய காலத்தில் இருந்தது. பகைவர் காட்டில் உன்ன மரம் வாடினுல் அவர்கள் தோல்வி அடைவார்க ளென்றும், அது தளிர்த் தால் அவர்கள் வெற்றி அடைவார்களென்றும் கினைப் பார்களாம். இப்படிப் பார்க்கும் நிமித்தத்தை உன்ன கிலே என்று கூறுவர். ஒர் அரசன் தன் பகைவர் நாட்டு உன்ன மரம் கரியும் படியாக வெற்றி பெறுகிருளும். அதனால் அவனே, "உன்னத்துப் பகைவன்' என்று ஒரு புலவர் சொல்கிரு.ர். -

சேர மன்னர்களின் ஈகையின் பெருமையையும் பல வகையாகப் புலவர்கள் பாடுகிருர்கள். பகைவரை வென்று அவர்கள் நாட்டிலே பெற்ற பண்டங்களைத் தமக்கு என்று வைத்துக் கொள்ளாமல் பரிசிலர்களுக்கு வாரி வழங்குகிருர் கள் அம்மன்னர்கள். பாணர்களுக்குப் பரிசில் பல தருவ தோடு பொற்ருமரையைச் சூட்டுகிருர்கள். விறலி முத்து மாலேயும் அணிகலமும் பெறுகிருள். சேரருடைய புகழைப்