பக்கம்:புதையலும் பேழையும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

i is .

琵J梧”源

எளி :

I for

பின்னோக்கி

grams :

தாத்தா :

எளி :

புதையலும்

பாண்டியா! இவற்றைச் செய் என்று நான் சொல்ல வில்லை. இவற்றை விட எளிதானது சொல்வேன்,

அப்படிச்சொல்க! என்ன அது?

“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவி'

என்ன? எழுத்தறிவிப்பதா? அதற்கு அறிவு வேண்டும். அஃதும் செறிவாக வேண்டும். சொல்லுக்கு எளிதாக இருக்கிறது. செயலுக்கு அருமை; மிக அருமை.

நட கால்களால் அன்று; மனத்தால் நட. இடத்தால் அன்று, காலத்தால் நட. முன்னோக்கி அன்று: பின்னோக்கி நட. ஒராயிரம் ஆண்டு பின்னோக்கி நட. ஒரு பெரியவரைக் காண்பாய். அவர் உனக் கேற்ற எளிதான அறத்தைச் சொல்வார். போடா, பாண்டியா போ!

கேட்ட எளியவன் மனத்தால் ஆயிரம் ஆண்டுகள் நகர்ந்தான்,

திருமூலர் எளிமை.

ஒரு தாடித் துறவியரைக் கண்டான்.

தாத்தா. அறம் செய்ய ஆர்வம் கொண்டுள்ளேன். எளிதாகச் செய்யத் தக்க அறம் ஒன்றை அருளுக,

பேரா, வாழ்க நீ அறம் செய்யும் எண்ணம் வந்ததே

அதற்காக நீ நூறாண்டு வாழ்க எளிதான அறந் தானே? வில்வ மரத்திலிருந்து இலைகளைக்கொய்து சிவபெருமானுக்குப் போடு. அஃதே அறம்; மிக எளிதான அறம். மேலும் யாவருக்கும் ஆகும் அறம்.

தாத்தா மரத்தில் ஏற வேண்டும். இறங்க வேண்டும். சிவ உருவைத்தேடி நடக்க வேண்டும்

போட வேண்டும். இத்துணை முயற்சி என்னால்

முடியாது.