பக்கம்:புதையலும் பேழையும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 புதையலும்

மா, வேம்பு, இருப்பை, புன்னை, அகத்தி முதலியன. முற்காலத் தில் இம்மரங்கள் தனியாரது உடைமைகளாக இல்லை. பொதுப் பொருள்களாக இருந்தன. நோய் யாவருக்கும் பொதுவுடைமை யாக இருப்பது போன்று மருந்துகளும் பொது வுடைமைப் பொருள்களாக இருந்தன. இந்நாளிலும் இவற்றில் சில மரங்கள் பொதுமக்கள் பயன்கொள்ளும் பொதுவுடைமைப் பொருள்களாக உள்ளன. இவற்றின் உறுப்புகள் பலவும் மருந்துக்குப் பயன் படுவன. ஆயினும், அவை ஒவ்வொன்றையும் விரித்துப் பயன் காண்பது மிக அகலமாகிவிடும். .

எனவே, இவற்றினது உறுப்புகளில் மிகுதியும் பயன் நல்கும் பட்டைகளின் தன்மைகளை விரித்துக் காணலாம். அப்பட்டைகளின் எல்லாவகைப் பயன்களையும் முற்றக் காணல் இயலாது. பட்டையை மட்டும் தனித்துப் பயன்கொள்ளும் முறை களைமட்டும் விரிவாக்கலாம். அவ்விரிவை மாறனுடன் பொருத்தி அவனது சிறப்பு இயல்புகளால் விளைந்தவற்றையும் உணரலாம் அவ்வுணர்வால் பல பொதுமைக் கருத்துகள் வெளியாகும்.

ஒதிய மரம்.

'ஒதி பருத்தால் உத்திரத்திற்கு உதவாது’ என்பர் ஆனால், மரம் பருத்துப் பலகையாக்கினால் அப்பலகையில் படுத்தல் உடலுக்கு நலந்தரும். .

ஒதியம் பட்டையை இடித்து, இடித்த நிலையிலேயே. உடல் வீக்கத்திற்குக் கட்டினால் கெட்ட நீரை வாங்கி விக்கத்தை வடியச் செய்யும். இதனை மருத்துவக் குறள் என்னும் நூல்,

'ஒதியம்பட் டையிடித்து வீக்கத்திற் கட்டித் திதிசெய் வதாற்கடி வார்”

.என்று குறிக்கின்றது- .ت " * பட்டையின் சாற்றைப் பாலில் கலந்து அளவோடு அருந்திவரப் 'பெரும்பாடு' என்னும் நோய் அரும்பாடுபட்டு அழியும், ஆண் களுக்கு விந்து கசிவதைத் தடுத்து வீரியத்தை உண்டாக்கும்.

ஒதிய வேரின் பட்டையை எடுத்து நீரிலிட்டுக் கறுக்கு நீராக்கி அந்நீரால் புரையோடிய புண்களைக் கழுவுக் கழுவு நீராகப் (iotion) பயன்கொள்ளலாம். அது புண் அழுகலைப்