பக்கம்:புதையலும் பேழையும்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலப் பின்னணி.

பின்னலும் முடிச்சும்,

தமிழ் நூல் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வட மொழி நூல் மூலம் -என்பது ஒருவகையார்க்கு வாடிக்கை நோய். அன்னார் சிலப்பதிகாரத்தி லும் வாய் வைத்தனர்; பின்னர் பொத்திக் கொண்டனர்.

நாகைத் தமிழ்ச் சங்கத்தில் நிகழ்ந்த சிலப்பதி கார வகுப்பில் பல கருத்தினரும் பயின்றனர்.

பயின்றவருள் ஒருவகையார் கண்ணகியார் மார்பைத் திருகி எறிந்தது போன்றவை நம்பத் தகாதவை என ஒரு சிக்கலைப் பின்னினர். மறுவகையார் இதனை வாய்ப்பாக்கிக்கொண்டு நிகழாத கதை தானே என்று பின்னலை முடிச்சாக்கினர். மறு வகுப்பில் ஒரு சொல் கொண்டு முடிச் சவிழ்த்துப் பின்னலைப் பிரிக்க முடிந்தது. ஏற்ற இருவகையாரும் இதனைக் கட்டுரை யாக்க வேண்டினர். 'தமிழரசு' இதழ் வெள்ளி விழா மலர்க்குக் கட்டுரை வேண்டுகையும் இணைந்தது.

'முடிச்சவிழ்க்கும் சொல்'

எழுந்தது.

வெளியீடு : 'தமிழரசு” வெள்ளிவிழா மலர். தி. ஆ. 2002 : கி. பி. 1971.