பக்கம்:புதையலும் பேழையும்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 புதையலும்

அவ்வாறு சிலப்பதிகாரத்தில் முடிச்சுபோல் அமைந்துள்ள வை இரண்டு. ஒன்று கண்ணகியார் மார்பைத் திருகி எறிந்தமை. மற்றொன்று மார்பை திருகி எறிந்து மதுரையை எரித்தமை.

இங்கு மார்பைத் திருகி எறிந்த நிகழ்ச்சி மட்டிலும் ஆயப் படுகின்றது.

மார்பைச் சிதைத்துக் கொள்ளும் மரபு

மார்பைச் சிதைத்துக் கொள்ளுதல் என்பது இலக்கியச்

செய்தி மட்டும் அன்று. சிலப்பதிகாரத்தில் மட்டும் வரும் நிகழ்ச்சி அன்று. அஃது ஒரு நடைமுறையாக இருந்தது.

மான உணர்வால் உயிரை விடுவதற்கு ஏதேனும் உயிர் முடிச்சான உறுப்பைச்சிதைத்துக்கொள்ளுதலை மக்கள் முன்னாளி லும் கைக்கொண்டதுண்டு. நாக்கைப் பிடுங்கிக் கொள்தல், அாக்கிட்டுக்கொள்தல், மலையிலிருந்து விழுதல்,நெருப்பில் பாய்தல், *டுமTத்தில் ஏறுதல் முதலிய பலவற்றைத் தற்கொலைச் செயல் களாக கொண்டனர். இக்காலத்திலும் நாம் கண்டுவருகிறோம். இலக்கியங்களும் அக்கால நிகழ்ச்சிகளாகப் பேசுகின்றன. நீலகேசி என்னும் சமண சமயக் காப்பியமும் இதனை அறிவிக்கின்றது. 1 இந்நாளிலும் மானமிருந்தால் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு செத்துப் போ' என்று பேசப்படுவதைக் கேட்கின்றோம்.

இவைபோன்றே தமக்கு ஒரு பழி நேர்ந்துவிட்டால் அதன் போக்குவீடாகத் தம் உயிரைப் போக்கிக்கொள்ளும் உணர்ச்சிக் கொப்பளிப்பில் நிற்கும் பெண்கள் தம் மார்பைச் சிதைத்துக் கொண்டனர். இதற்கு முதற்சான்றாகப் புறநானூற்றில் செய்தி உளளது:

போருக்குச் சென்ற தனது வீர மகன் புறங்கொடுத்தான்' என்று கூறப்பட்ட பழிச்சொல்லைக் கேட்டாள் வீரத் தாய். அப் பழியைப் பொறாதவளாக உணர்ச்சிக் கொப்பளிப்பில் எழுந்தாள். எழுந்து சூளுரை கூறினாள்:

1 'துக்கல் தம்மை ஆக்கலே தொல்லை நல்ல றம்மெனில்

நாக்களைப் பறித்தலும் நான்று வீழ்ந்து பொன்றலும் தீக்கள் பாய்ந்து சாதலும் தீயசெங் கழுவவின்மேல் மேக்கி னைக்கொண் டேறலும் மேன்மை யென்ன லாம்பிற,"

- நீலகேசி : 353,