பக்கம்:புதையலும் பேழையும்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதையலும் لتوبۃ * sمیہ

நாகைச் சிறுவன் பொழுதுபோக்கு விளையாட்டாக எண்ணிக்கொண்டிருந்தான். எண்ணும் காட்சியைப் புலவனாகிய யான் நின்று கண்டேன். கண்ட எனக்கு, .

பன்மாண் பொருளொடு விண்மீன் தொகுத்து வங்கக் கடலில் வருகலன் விளக்கொளி பொங்கிருள் கவ்வும் பொழுதிற் கரையிருந்(து-) ஒகைச் சிறுவன் எண்ணும் வாகை குடிகொள் நாகை நகரே!

-என்று பாடத் தோன்றியது.

"இஃதும் காணத்தக்க அருங்காட்சியோ? இது ஆணத்தக்கதும் ஒரு பாடலோ?

-- άrάδΤ δήσότσλιουπιώ, இதற்கு நற்றிணை விடை கூறுகின்றது.

சங்கப் புலவர் உலோச்சனார் இதுபோன்ற காட்சி யொன்றைக் கண்டார். இங்கே சிறுவன் கரையில் நின்று எண்ணக் கண்டோம்; அங்கே ஒரு பெண் மனையிலிருந்து எண்ண, அவர் கண்டார். சிறுவன் அந்தியில் எண்ணினான். மனைக்கிழத்தி விடியலில் எண்ணினாள். இங்கு வெளிநாட்டுப் பொருள்களைத் தொகுத்து இறக்கும் வணிகக் கலம் நின்றது; அங்கு கழிகளில் மீனைத் தேடித் தொகுக்கும் பரதவர் படகுகள் வந்தன. இங்கு ஒரு கலத்தில் பல விளக்குகள் எண்ணப் பட்டன; அங்கு ஒவ்வொரு திமிலுக்கும் (படகு) ஒவ்வொன்றாக எரியும் விளக்கம் எ எண் ணப்பட்டது. கண்டு நின்ற உலோச்சனார் பாடினார்:

& &

... ... ... மனையிருந்து இருங்கழி துழவும் பனித்தலைப் ‘பரதவர் திண்டிமில் விளக்கம் எண்ணும் கண்டல் வேலிக் கழிநல் லுரே”

1 எலாசியன் பாடல், 2 தத் : 872 : 10-18,