பக்கம்:புதையலும் பேழையும்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் - - 241.

னோடு சேர்த்தே கூறவேண்டும். 'மாணாக்கனோடு ஆசிரியன் வந்தான்’ எனக் கூறக்கூடாது. இவ்வகையில், 'செந்தமிழோடு ஆரியன்’ என்னும் தொடரில் செந்தமிழ் ஆரிய நிலைக் கடவுளுக்கு உயர்வாய்க் கூறப்பட்டது. இக்குறிப்பால் செந்தமிழில் வழிபாடு இயற்றல் தனியாகக் குறிக்கப்பட்டதாகக் கொள்ளலாம். அவரவர் தம் தம் மொழியில் பூசித்தனர் என்பதை நம்மாழ்வாரும்,

'உலகர்கள் எல்லாம்

தங்கள் அன்பு ஆரத் தமது சொல்வலத்தால்

தலைத்தலை சிறந்து பூசிப்ப' -என்றார். இவ்விடத்துப் பகவத் கீதையில் கண்ணன் கூறியதையும் காணல் பொருத்தமாகும்.

"யார் என்னை எப்படி வழிபடுகின்றார்களோ யான் அவர்களுக்கு அப்படியே அருள்புரிகின்றேன்.” -இது கொண்டு வடமொழி நூலிலும் அவரவர் விருப்பப்படி அவரவர் மொழியிலே வழிபடல் விலக்கப்படவில்லை என்பதை உணரலாம்

திருமூலர்,

"தமிழ்ச்சொல் வடசொல் எனுமிவ் விரண்டும்

உணர்த்தும், அவனை உணரலும் ஆமே” -என்று பாடியமை கூர்ந்து நோக்கத்தக்கது. இவ்விரண்டு அடிகளுக்கு முன்னே இரண்டு அடிகள் உள். அவற்றில், ஆன்மா பற்றால் பிணிக்கப்படுவதும் விடுபடுவதும் முடிவில் போதலும் குறிக்கப்படுகின்றன. இங்குள்ள உணர்த்தும் என்னும் சொல் 'ஆன்மாவின் நடப்பைஉணர்த்தும் என்றும் 'அவனை என்பது 'இறைவனை - உணர்த்தும்' என்றும் இயைந்து பொருள்படும், 'உணரலும் ஆம்' என்பது தமிழ்ச்சொல்லாலும் வடசொல்லாலும் இறைவனை உணர முடியும் என்பதை வலியுறுத்துவது. "தமிழ்ச் சொல், வடசொல்' என்று சொல்லைக் குறித்திருப்பதால் இது போற்றி வழிபடும் அருச்சனையைக் குறிப்பதாகும். “தேவபாடை

1 திருவாய் 9 : 2 : 8. 2 திருமந் : ஆகமச் சிறப்பு 10,

பே. 16