பக்கம்:புதையலும் பேழையும்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் - 248

குருக்கள் வடமொழியாளராய் அமைந்தமையால் வட மொழியைப் புகுத்தினர்;

தமிழ்ப் போற்றி முறை தள்ளப்பட்டது.

'ஒசை ஒலியெலாம் ஆன" இறைவன் தமிழ் ஒலியை மட்டும் நீக்கியவனாக ஆக்கப்பட்டுள்ளான்.

தமிழில் வைதாலும் வாழ வைப்பான்.

நம் காலத்துப் பாரதியாருக்கும் தமிழ் வழிபாட்டு எண்ணம் தோன்றியது. எந்தச் சொல்லால் இறைவனை விரைவில் வரவழைக்கலாம் என்று எண்ணினார். அவ்வெண்ணத் தை சொல்' தலைப்பிட்டுச் சில பாடல்களால் வெளியிட்டார். தொடக்கப் பாடல்,

"தேவர் வருகவெண்று சொல்வதோ? - ஒரு செம்மைத் தமிழ்மொழியை நாட்டினால் ஆவலறிந்து வருவீர்கொலோ? - உம்மை

அன்றி ஒரு புகலும் இல்லையே'

-என்பது, தமிழ் மொழியால் போற்றினால் இறைவன் ஆவலை அறிவான் என்ற கருத்தின் வெளிப்பாடு இது. தொடர்ந்து பல தமிழ்ச் சொற் களைப் பாடிய பாரதியார் இறுதியில்,

'அமிழ்தம் அமிழ்தம் என்று கூறுவோம் - நித்தம் அனலைப் பணிந்து மலர் தூவுவோம்; தமிழிற் பழமறையைப் பாடுவோம்-என்றும் - தலைமை, பெருமை, புகழ் தேடுவோம்”

-என்று முடித்துள்ளார். இறைவனைப் போற்ற' அமிழ்தம்' என்ற தமிழ்ச் சொல்லைக் கூறினார். 'மலர் தூவி' என்று குறித்திருப்பதைக் கொண்டு அருச்சனை செய்வதற்குப் போற்றிச் சொல்லாகத் தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்தலாம் என்று குறித்ததாகக் கொள்ள

1 பாரதி : சொல் : 1. 2 பாரதி : சொல் 10