பக்கம்:புதையலும் பேழையும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலப் பின்னணி

கூடை முடைவார் குறித்த சொல்

தொழிலாளி ஒருவர் மூங்கிற்கூடை முடைந்து கொண்டிருந்தார். தவழ்ந்து வந்த குழந்தை எதனையோ வாயில் வைத்தது. தந்தை, பிள்ளை சொலியை வாயில் வைக்கிறான், எடு' என்றார். சொலியா? அது என்ன?, என்று காண என் கவனத்தைத் திருப்பினேன். முற்றிய மூங்கில் இரண்டாகப் பிளந்து கிடந்தது. அதன் உட்பகுதியில் ஒட்டியிருந்த வெண்மையான பட்டுத்தாள் போன்ற சிறு பட்டை பெயர்ந் திருந்தது. அதைத்தான் சொலி என்றார். கழை படு சொலி” என்னும் இலக்கியத் தொடர் நினைவில் எழுந்தது. நாட்டுப்புற மக்கள் நாவில் நல்ல தமிழ் உலவும் என்பதற்கு இஃதொரு சான்று.

சொலியில் சொல் முன்னோடியாக, அரும் மொழி ஊற்றத்தைக் காட்டி நிற்பதை வெளிப் படுத்த முனைந்த ஆய்வின் வடிப்பு,

"சொல் ஒரு நெல்' - - ஆயிற்று.

வெளியிட்ட இதழ் : " தமிழரசு", தமிழ்நாட்டரசு வெளியீடு. தி. ஆ. 2001-புரட்டாசி-30 16–10–1970,