பக்கம்:புதையலும் பேழையும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 69

பிறந்த நாளில் வெள்ளணி அணிந்தபோதே பகை

மன்னர் முடியிலணிந்த மாலையைத் தன் காலடியில் கண்டான்' என்று பிறந்த நாளை வைத்துப் பெருமையை

வெளிப்படுத்தினார். 感

பிறந்த நாள் நலம்

பிறந்த நாளில் இல்லம் தூய்மை செய்யப்படும் மன்னனுக்குப் பிறந்த நாள் என்றால் நாட்டின் இல்லங்கள் யாவும் மக்களால் துப்புரவாகும். மங்கலப் பொருள்களால் இல்லத்தை ஒப்பனை செய்வர். துப்புரவு செய்யும் போது இல்லத்தில் சிலந்திகள் கட்டியுள்ள கூடுகளாம் ஒட்டடைகளை நீக்குவர். இதனை முத்தொள்ளாயிரம் மிகச் சுவைபட அறிவிக்கின்றது:

சோழ மன்னன் பிறந்த இரேவதி நாள் ஒருவகையில் ஒர வஞ்சம் கொண்டது. இந்நாளில் அந்தனராம் செய்தண்மையாளர் ஆவும் பொன்னும் பரிசாகப் பெற்றனர். நாவன்மை மிக்கவர் மலைபோன்ற களிற்றைப் பரிசாகப் பெற்று அதன் மீது ஏறிச் சென்றனர். அவர் களோ நலம் பெற்றனர். ஆனால், அதே பிறந்த நாள் சிலந்தி கட்டிய கூட்டை இழக்கச் செய்ததே' -என்று பலரைப் பெறவைத்துச் சிலரை இழக்கச் செய்ததாகக் குறிக்கின்றது.

நயமான அப்பாடல் இது;

அந்தணர் ஆவொடு பொன்பெற்றார்; நாவலர் மந்தரம்போல் மாண்ட களிறுார்ந்தார்; எந்தை இலங்கிலைவேற் கிள்ளி இரேவதிநாள் என்னோ! சிலம்பிதன் கூடிழந்த வாறு” - -

இல்லங்கள் தூய்மையானதை இவ்வாறு வஞ்சப் புகழ்ச்சி யாகப் பாடினார். இல்ல நன்மைபோன்று பல நன்மைகள் மன்னரது பிறந்த நாளால் விளைந்தன. வாட்கண்டன்

1. சிவ, சி , 614

اسلام ہممممم سے تیس.