புதையல் 15 உண்டாக்கியது தெரியுமா? டார்ச் லைட் ஒளிபட்டு மின்னும் அந்த எழுத்துக்கள் எல்லாம் அம்பலத்தின் கண் ணு க்கு வைர மழை காட்டுவதுபோலத் தோன்றின. தனக்குத் தானே ஒரு முறை பொருள் கூறிக்கொண்டார். இந்த சூரியன் மிடையிலே - “எழுவான் என்றால் சூரியன்-தொழுவான் என்றால்- இந்தக் கோயிலில் இருக்கிற ஆண்டவன் - சூரியனுக்கும் ஆண்டவனுக்கு அப்படியானால் உதயத்திலிருந்து சாளுவ நாயக்கன் பட்டினம் வரையிலே வியாபித்திருக்கிற கடலிலே பசும் பொன் இருக்க முடியாது - அதனால் சாளுவ நாயக்கன் பட்டினத் திற்கும் இந்தக் கோயிலுக்கும் இடையிலே தான் அந்தப் புதையல் இருந்து தீரவேண்டும் - காக்கை மூக்கு நிழலிலே என்பதையும் தான் காலையிலே ஆராய்ந்து விட்டோம்- அதோ இருக்கிற ஒதிய மரத்தின் மேல் காலையில் அமர்ந்த காக்கையின் மூக்கு நிழலை நான் அப்போதே குறித்துக் கொண்டேனே; அந்தக் குறிப்பு சரியாகத் தான் இருந்து தீர வேண்டும் என்னமோ எல்லாம் சிவன் செயல்- கடவுளே! மருங்கப் பள்ளத்து மகேஸ்வரா, தேடும் பசும் பொன் கிடைத்து விட்டால், தங்கக் கட்டிகள் அகப்பட்டு விட்டால், உனக்கு ஒரு வெள்ளி ரிஷப வாகனம் செய்து வைக்கிறேன்- - - இப்படியெல்லாம் ஆசைக் கனவு கண்டவாறு கோயி லுக்குள்ளிருந்து வெளிவரத் திரும்பினார். திரும்பிய அவர் கவனத்தை ஏதோ ஒரு ஒலி இழுத்தது. அப்படியே அசையாமல் நின்று கவனித்தார். று இச்-இச்-என்ற ஒலி! அது என்ன ஒலிஎன்பதை அவர் புரிந்துகொண்டார். மீண்டும் கவனித்தார். போதை நிறைந்த வார்த்தைகள் அவர் காதுகளில் மோதின.
பக்கம்:புதையல்.pdf/17
Appearance