202 மு. கருணாநிதி மூச்சு சு சந்திரமதி தர்க்கம் முடிந்து சந்திரமதியை வெட்டப்போகி றான் அரிச்சந்திரன். நான் பிரேதம் போலவே, விடுவது, ஜனங்களுக்குத் தெரியாமல் சிதை மேல் படுத் திருக்கிறேன். எனக்காக அடுக்கப்பட்ட வரட்டியிலே தேள் இருந்தது போலும். அதை யாரும் கவனிக்கவில்லை. அது நன்றாகக் கொட்டிவிட்டது என்னை."அய்யோ! தேளு! தேளு!" என்று அலறியபடி எழுந்துவிட்டேன். சந்திர மதியை வெட்ட வாளெடுத்த அரிச்சந்திரன் திகைத்து விட்டான். வாள், சந்திரமதியின் கழுத்திலே மாலையாக விழுந்து, பிறகு பரமசிவன் வந்து, லோகிதாசனை உயிர் பிழைக்க வைக்க வேண்டும். வரட்டியிலே இருந்த தேள், கதையையே மாற்றி விட்டது! பாம்பு கடித்து இறந்த வனை தேள் எழுப்பி விட்டது. நல்ல காலம்; பரமசிவன் வேஷம் போட்டவன் கொஞ்சம் சமயோசித புத்திசாலி! அவன் மேடைக்கு ஓடி வந்தான்! 66 1 உன் அகோ, வாரும் பிள்ளாய் அரிச்சந்திரா! னுடைய சத்தியத்தை மெச்சினோம். உன் மனைவியின் குரல் கேட்டு, உன் மகனைக் காப்பாற்ற கைலாயத்தி லிருந்து வேகமாக வந்தோம். வரும் வழியில் காளை மாட் டின் கால் முறிந்துவிட்டது. அதை ‘ரிப்பேர்' செய்து கொண்டு வர நேரமாகுமே என்று யோசித்தோம். அதற் குள் லோகிதாசன் உயிர் எமலோகம் போய்விட்டால் திரும்ப 'வாபஸ்' பெற முடியாதே என்று, வழியிலே சந் தித்த வாயு பகவானை அனுப்பினோம். அவர் தேளாக உருவெடுத்து, பாம்பு கடித்து மாண்ட பாலகனை எழுப்பி விட்டிருக்கிறார் - மங்களமுண்டாகட்டும் - சுபம்!” என்று ஒரு புது பிரசங்கம் செய்தான். அதற்கும் ஜனங்கள் கை கொட்டினார்கள். எனக்கோ தேள் கொட் டிய வலி தாங்க முடியவில்லை. இப்படி கூத்துங் குதூகலமு 5.7
பக்கம்:புதையல்.pdf/204
Appearance