204 ட உடல் மு. கருணாநிதி 23 துரை சொன்ன கதை முழுவதையும் கூர்ந்து கவ னித்து வந்த கிழவர், திடீரென்று மயக்கமுற்று சாய்ந்த காரணம் தெரியாமல் துரையும் பரிமளமும் திகைத்து விட் டார்கள். அவரைத் தூக்கி எடுத்து மயக்கம் தெளிவதற் கான சிகிச்சைகளை செய்யத் தொடங்கினார்கள். கிழவரின் முழுதும் வியர்வையால் நனைந்தது. சுருக்கம் விழுந்த அவரது நெற்றியிலே வியர்வைத் துளிகள் முத்து முத்தாய் உருண்டன. பரிமளா கொண்டுவந்த தண்ணீ ரில் துண்டை நனைத்து அதை அவரது முகத்திலே ஒத்திக்கொண்டேயிருந்தான் துரை. சிறிது நேரத்திற் கெல்லாம், கிழவர் அசைந்து படுத்தார். மெதுவாக விழி களைத் திறந்தார். “ பெரியவரே! பெரியவரே!” என்று துடிதுடிப்போடு துரை அவரைக் கூப்பிட்டுப் பார்த்தான். எழுந்து உட் கார்ந்து கொள்ள விரும்புவதாக அவர் ஜாடை காட்டினார். துரையும், பரிமளாவும் அவரைத் தூக்கி நாற்காலியிலே உட்கார வைத்தனர். நாற்காலியிலே சாய்ந்தபடி கிழவர் பெருமூச்சு விட்டார். “ஏன் திடீரென்று மயக்கம் வந் தது? வழக்கமாக வருமா? என்று கேட்டாள் பரிமளா. 'வராது' என்பதையுணர்த்த அவர் தலையை அசைத்துக் காட்டினார். “நான் சொன்ன கதையினால் ஒரு வேளை, உணர்ச்சி வசப்பட்டு விட்டீர்களோ? " என்று ஆவலாகக் கேட்டான் துரை. - 'ஆமாம்' என்று மெதுவாக உதடுகளை அசைத்தார் 'உம்' என்று முணகிக் கொண்டார். 66 'இப்படித் தெரிந்தால் நான் சொல்லியிருக்க மாட் டேனே; இந்தக் கதையை" - என்று தனக்குத் தானே
பக்கம்:புதையல்.pdf/206
Appearance