உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதையல்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதையல் 215 போர்த்து பழகினோம். அவன் இறந்தபோது நான் பக்கத் திலே தானிருந்தேன். 'ஏன் இறந்தான்' என்பதை வெளி ப்பிட என்னால் இயலவில்லை. நினைக்கும்போதே நெஞ்சு முறுகிறது. சொல்லவும் ஆரம்பித்தால் அவ்வளவு தான் என் பாடு! ” அடக்குவதற்குப் பதிலாக அதிகமாகத் தூண்டி விடுகிறீர்கள் ஆவலை! நீங்கள் அதை சொல்லித்தான் தீர வேண்டும்!" 66 குமாரவடிவுக்கு கொடுத்த வாக்குறுதியை மீற மாட் டேன்; நண்பனாக இருந்த நான் துரோகியாக மாற மாட் டேன். சாவு அவனுடைய சொந்த விஷயம். வெளியிலே தெரியக் கூடாத பரம ரகசியம் அந்த சாவிலே அடங்கி யிருக்கிறது. அதை நான் வெளியிலே சொன்னால் நட்புக்கு குக்கப்பட்ட நல்ல இலக்கணத்தை நாசம் செய்தவர் களின் பட்டியல்களிலே இடம் பெறுவேன்." “ பெரியவரே - மகனிடம் தானே சொல்லப் போகிறீர் கள்; மாற்றாரிடம் அல்லவே?" 66 எத்த இன்னுங் கூறப் போனால், சிறை சிறை மீண்ட பிறகு நானும் குமாரவடிவும் சேர்ந்து செய்த காரியங்கள் எ ேையா உண்டு. உலகத்திலே நடக்காதது எதையும் செய்துவிடவில்லை. அப்படி நடக்கும் காரியங்களின் அளவை விட எவ்வளவோ குறைவானதுதான் நாங்கள் ஈடுபட்ட காரியங்கள் ஆனாலும், இப்போது அவன் இறந்துவிட்டான் என்பதற்காக அவைகளை வெளியே கூறி என் இருதயத்தில் விஷத்தை நிரப்பிக்கொள்ள மாட்டேன். ” - 66 - அவைகளையெல்லாம் சொல்ல வேண்டாம் அய்யா! எனக்குத் தெரியும் என்னென்ன நடந்திருக்குமென்று.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதையல்.pdf/217&oldid=1719486" இலிருந்து மீள்விக்கப்பட்டது