உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதையல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மு. கருணாநிதி "எந்தக் குற்றமும் என எனக்குச் செய்யாத செய்யாத செல்வங்களே! மழலைகளே! பழம் பேசுகிறது கேளுங்கள்! பரிதாபத்திற்குரிய கிழம் கூச்சலிடுகிறது; செவியைத் திருப்புங்கள்! நான் கண் திறக்க முடியாமல் இருக்கின்ற கண்மணி! உன் அன்பன் மயக்கம் தெளிந்ததும் அவனிடமும் சொன்னதைச் சொல்... என்னுடைய சாவுக் கண்ணீர் நன்மைத் தருவை செழித்து வளரச் செய்யப் பயன்படாதா என்று எத்தனையோ முறை எங்கியிருக்கிறேன். ஆனால்; இதோ என் வாழ்வின் கண்ணீர் உங்களை வாட்டி வதைத்து விட்டதை விடுங்கள். நான் உணருகிறேன். என்னை மன்னித்து உங்கள் அப்பனை மன்னிப்பது போல என்னை மன்னித்து விடுங்கள்! - நன்மை யொன்றை-யாரும் செய்ய முடியாத விதத் திலே செய்ய வேண்டும் என்று எத்தனையோ நாளாய்த் தவித்து நிற்கிறேன். சுயநலமும் வ வஞ்சகமும் சூதும் பொறாமையும் வேலிகளாய் அமைந்துவிட்ட மனிதனின் வாழ்க்கைத் தோட்டத்திலே -நன்மை மலர்களே மலரக் கூடாதாமே! அப்படி ஒரு கடும் சட்டம் கடவுள் எனப் படுவோன் விதித்து விட்டானாமே! ஆகவே, நான் செய்ய வேண்டுமெனறு எண்ணியிருக்கிற நன்மையை சுருட்டிக் கொண்டு, கடல் கடந்து போகிறேன். அது என்ன நன்மை என்று என்னைக் கேட்டு விடாதீர்கள். நீங்கள் யாரோ எவரோ-நான் எப்படி உங்களிடம் தைரியமாகச் சொல்ல முடியும். நீங்கள் என்னைப் பார்ப்பதே கூடாது- அது மிகப் பயங்கரமானது என நினைக்கிறேன் நான்! ஆகவே நான் அந்த நன்மையைப் பற்றிய உண்மையை சொல்ல மாட்டேன். அந்த அந்த உண்மை யாருக்குமே தெரியா மல் அழிந்து விடத்தான் போகிறது போலும்! அந்த ச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதையல்.pdf/34&oldid=1719282" இலிருந்து மீள்விக்கப்பட்டது