உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதையல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 66 மு. கருணாநிதி 1 பாதியிலேயே துரை விழித்துக் கொண்டான்; என்றாலும், முழுவதையும் கேட்டுவிட வேண்டுமென்ற ஆவலில் மயக்க முற்றவன் போலவே கிடந்தான். ஆனால்; கிழவர் சரபோஜி, இதை ஏன் கட்டினான் தெரியுமா?" என்று ஆரம்பித்த போது, "என்?" என்று கேட்டுவிட இதழ் அசைத்து விட்டான். உடனே அந்த வார்த்தையை அடக்கிக்கொண்டு, சமாளிப்பதற்காக சிறிது முணகினான். அவ்வளவு தான்; கிழவர் இனி அங்கு நிற்கக்கூடாது என்ற முடிவுடன், அவசர அவசரமாக, கீழே இறங்கினார். அவர் கீழே இறங்கி விட்டார் என்பதைத் தெரிந்து காண்ட துரை, உடனே எழுந்து, தலையை சரி செய்து கொண்டு, பரிமளத்தின் கட்டுக்களை அவிழ்க்க ஆரம்பித் தான். அதுவரையில் அதிசயத்தோடு கிழவரின் வார்த் தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த பரிமளமும், தன் அத் தானின் கரம்பட்டு புத்துணர்ச்சி பெற்றாள். இறந்து போய் மீண்டும் புது ஜென்மம் என்ற கற்பனை உண்மை யாகவே க கவே நிகழ்வது போல ரு த து அவர்களுக்கு! பரிமளத்தின் கட்டப்பட்ட கரங்களை அவிழ்த்து விட்டு, அந்தக் கரத்தை எடுத்து முத்தம் கொடுத்தான் துரை. சுவைத்தளித்த அந்த முத்தத்தை பரிமள சுந்தரியும் தேனில் துவைத்தெடுத்த பலாச்சுளை எனக் கருதி பெற் றுக் கொண்டாள். கட்டுண்டு கிடந்த அவள் கண்களுக் கெல்லாம் முத்தம் கிடைத்தது. பரிமளம் கண்ணைக் கட் டிய அந்தக் கிழவரை வாழ்த்தினாள். த முத்தத்திலேயே முடிந்து விடவில்லை - அந்த நேரம், துரை துள்ளி எழுந்து மனோராவின் பலகணி வழியாகக் கீழே பார்த்தான். பரிமளமும் பார்த்தாள். கிழவர் கடலோ ரத்தில் சென்று நின்றார். முதலிலே மனோராவை நோக்கி வந்த மனிதர்கள் அவரிடம் வந்து சுற்றி நின்றார்கள். 66 'இவர்கள் நம்மைத் துரத்திய முரடர்கள் அல்ல !" என்றான் பெருமூச்சுடன் துரை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதையல்.pdf/36&oldid=1719284" இலிருந்து மீள்விக்கப்பட்டது