36 - மு. கருணாநிதி -M தோணி கரைக்கு அருகே வந்து நின்றது. ஆட்கள் எல்லாம் தோணியிடம் ஓடினார்கள். கிழவர் நெருப்புக் குச்சியைக் கிழித்து, தன் இடுப்பில் உள்ள தாளை ஒரு முறை எடுத்துப் படித்துக் கொண்டார். தாள் உறையிலே முகப்பில் புதையல்- என்ற தேய்ந்த எழுத்துக்கள் தெரிந்தன. தீக்குச்சியை கீழே எறிந்துவிட்டு, உறையை நன்றாகச் சொருகிக் கொண்டு, வேட்டியின் முனையிலிருந்த சிறு முடிச்சையும் சரி பார்த்துக்கொண்டு, அவர் தோணி யிடம் போனார். படகோட்டி, அவரை மெதுவாகத் தோணி யில் ஏற்றி விட்டான், ஏறிக்கொண்டார். மற்ற ஆட்கள் ஏதோ பல மூட்டைகளை படகில் அவசர அவசரமாக ஏ ஏற்றினார்கள். படகிலிருந்தும் சில மூட்டைகள் துரிதமாக கரைக்கு இறக்கப்பட்டன. பின்னர் படகு நகர்ந்தது மீண்டும் கடலை நோக்கி பயணம் ஆரம்பமாயிற்று அந்தத் தோணிக்கு! - பரிமளமும், துரையும் அந்த காட்சியைப் பார்த்துக் கொண்டே நின்றார்கள். சாது போலத் தோன்றினார். பின்னர் மிரண்டார். அதன் பின் நன்மை செய்யப் பூண்ட கோலம் இது என்றார். கடைசியில் கள்ளத்தோணியிலும் ஏறி விட்டார். யார் இவர் ? இந்த நினைவுகள் காதலரை சிறிது றிது நேரம் மௌன மாக்கியிருந் தன. படகு சிறிது தூரம் நகர்ந்து இருட்டில் மறைந்துகொள்ளத் துவங்கியதும், பரிமளம் மறுபடியும் வீட்டுக்குப் போகும் பிரச்சினையில் ஈடுபட்டாள். “நல்ல இரவு இது. கோயிலுக்குச் சென்றோம். அங்கே கொம்பேறி மூக்கன் பாம்பு போல ஒருவன் வந்தான். கோபுரத்துக்கு வந்தோம் -விசித்திர மனிதனைக் கண் டோம். நினைக்காத இடையூறுகள் அல்லவா - - யாரும்
பக்கம்:புதையல்.pdf/38
Appearance