38 மு. கருணாநிதி - கோயிலடியாயினும்- "சந்திப்போம் கண் கண்ணே கோபுரமேறியும்-அந்த இருவர் கண்ணிலும் படாத இடத் திலே அல்லவா இனி சந்திக்க வேண்டும் !” "சொல்லுங்கள். நேரமாகிறது!" " அதே கோயிலில் - அதே நேரத்தில் வரும் வெள் ளிக்கிழமை சந்திப்போம் - வா போவோம் !" ச 4 கிழவர் ஏறிக்கொண்ட தோணி கடலைக் கிழித்தபடி போய்க் கொண்டிருந்தது. பொழுது விடிய இன்னும் சில மணி நேரமே இருந்த காரணத்தால் வாடைக் காற்றின் கொடுமை அதிகமாகவே யிருந்தது. படகில் அடுக்கப் பட்டிருந்த மூட்டைகளின் இ டையே அவர் கோழி போல் உடலைச் சுருட்டிக் கொண்டிருந்தார். படகில் இன்னும் சிலரும் இருந்தார்கள். ஒரு பயங்கர முகம் படைத்த கிழவன், ஒரு காலத்தில் கட்டுமஸ்தாக இருந்தது இந்த தேகம், என்று எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தது அவனது உடலமைப்பு. அவன் பேசும்போது கேட்கச் சகிக்கவில்லை. அவ்வளவு கரகரப்பு. தாடிக்காக வளர்ந் திருக்கும் ரோமத்தையும் மீசையோடு இணைத்திருந்தான். பெரிய மீசைகள் இரண்டும் தோள்பட்டையில் உள்ள ஆழ மான குழிகளை தொடுவதற்கு முயற்சிப்ப து போல தொங் கிக் கொண்டிருந்தன. படகில் அந்தப் பயங்கரக் கிழவ னுடைய சப்தம் தான் பெரும் சப்தமாயிருந்தது. மற்றும் சில வாலிபர்கள் தங்கள் வேலைகளில் அக்கரை காட்டிக் கொண்டிருந்தார்கள். படகின் பாயை காற்றுத் திசைக்கு
பக்கம்:புதையல்.pdf/40
Appearance