புதையல் 41 கடல் மீன் எல்லாம் - ஆகாரமில்லாமல் தவிக்குது! இவருதான் உடலைத் தருமம் பண்ணப் போறாராம்! மீனு உன் பிணத்தை எப்படி அய்யா சாப்பிடும்? மீனுகளுக்கு எலும்பு கடிக்கத் தெரியாதே; நாய் மாதிரி" (மாயாண்டி சிரித்துக் கொண்டார்). "உன் உடம்பிலே ஒட்டிக் கொண்டிருக்கிற சதைத் திமிரிலே இப்படிப் பேசுகிறாய் கிழவா நீ! எலும்பு மனிதனா நான் ? இருக்கட்டும்! இருக்கட்டும்! இந்த எலும்பின் மதிப்பு உனக்குத் தெரியாது!' "யானைத் தந்தமாக்கும்; இறந்தாலும் ஆயிரம் பொன் பெற !” 66 ஆயிரமென்ன; இந்த எலும்பு மட்டும் சாகும்போது ஒழுங்காகச் செத்தால் எத்தனையோ லட்சம் பசும்பொன் பெறும்!' "ஒழுங்காகச் சாவதென்றால் என்னய்யா?” மாயாண் டிக் கிழவர் பேச்சை வேறுபக்கம் திருப்பிவிட முயன்றார். 66 அதாவது ஐயப்பா! கஷ்டப்படாமல் சாகவேண்டும் நிம்மதியாக - என்கிறேன்." ய 66 "உம்-அப்பேற்பட்ட மகான் ரமணரிஷிக்கே புத்து நோய் வந்து கஷ்டப்பட்டு செத்தாரு! நீயும் நானும் எப் படி சாகப் போகிறோமோ? ஆமாம்-மாயாண்டி! அப்படியே கஷ்டப்படாம சாகிறதா வச்சுக்க; அதுக்கும் லட்சக் கணக்கான பசும்பொன்னுக்கும் என்ன சம்பந்தம் ?" - "சும்மா - விளையாட்டுக்குச் சொன்னேன். நான் தான் ஒரு பைத்தியக்காரன் என்று அடிக்கடி சொல்வாயே-” "ஓய் ஓய்! பெரிய மனுஷா ! பொய் ! பொய்! ஜாக் ரதை-உண்மையைச் சொல்லி விடும்- இல்லே-கடல்!- ஞாபகம் வைத்துக் கொள்ளும் -!”
பக்கம்:புதையல்.pdf/43
Appearance