44 மு. கருணாநிதி பார்க்கப் போனால், அப்படி ஒரு கதை நடந்திருக்கலாம் என்றும் நம்ப இடமிருக்கிறது!" 66 மாயாண்டி!.. அந்தக் கதையைச் சொல்லுமே இப்போது நானும் பலரிடம் கேட்டிருக்கேன் அந்தக் கதையை-உமது வாயாலும் கேட்கிறேன். 66 - என் வாயால் கேட்க முடியாது! உன் காதாலேயே கேளப்பா!" ஐயப்பன் அசட்டுத்தனமாக சிரித்துவிட்டு பக்கத்தி லிருந்த மூட்டையை அவிழ்த்து அதிலிருந்து ஒரு வெங் காயத்தை எடுத்துக் கடித்துக் கொண்டான். "எல்லா மூட்டைகளும், வெங்காயம் தானா?” என்று கேட்டார் கிழவர். 66 ஆமாம்- கதையைச் சொல்லும் அய்யா!” என்று சலித்துக் கொண்டான்-ஐயப்பன். - "சொல்கிறேன் - உம்!....... வெங்காயத்துக்கு பதில் என்ன கொண்டுவரப் போகிறீர்கள்?" "வெங்காயத்து பண்டமாத்து - தேங்காய் எண்ணை கொண்டு வருவோம்! ஓய், கிழவா ! பேச்சை மாத்தாமல் கதையைச் சொல்லும்!” சொல்லுகிறேன் " என் என்று கனைத்துக் கொண்டார் மாயாண்டி! றுக "டேய்! பசங்களா! எல்லாரும் ஒழுங்கா கவனிச்சுப் போங்க - கவிழ்த்து விட்டுடாதிங்க!" என்று ஆட்களை ஒருமுறை அதட்டிவிட்டு, ஐயப்பன் கதை கேட்கத் தயா னான். கிழவரும் ஆரம்பித்தார்.
பக்கம்:புதையல்.pdf/46
Appearance