7 யாளமாக இந்த நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது என்று தான் செதுக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் தெரிவிக் கின்றன. ய - படை ஆங்கிலேயரின் ஆதிபத்யம் ஆதிபத்யம் ஆணிவேர் ஆணிவேர் விடுவது கண்டு அஞ்சிய தஞ்சை மன்னன், அவர்களை எதிர்த் தொழிக்க ஒரு பாசறைக் கோட்டை ஆம், போர்க் கோட்டை கட்டினான் என்றும், அந்தக் கோட்டையிலே அவன் நினைத்தபடி ஏற்பாடுகள் நடப்பதற்கு முன்பே, செய்தி, ஆங்கிலேயருக்குப் பரவிவிட்டதென்றும் - வினா எழுப்பிய வெள்ளையரிடமிருந்து தப்புவதற்காகவே-இது வெற்றியின் சின்னம் - என சரபோஜி மன்னர் விடையளித் தார் என்றும் ஒரு தேய்ந்து போன செய்தி உலவுகிறது. எதிர்ப்பு முகாமோ - அல்லது எதிரியின் வெற்றியைப் புகழ்ந்திடும் மண்டபமோ-தெரியாது; ஆனால் மனோரா வின் அமைப்பு கண்ணைக் கவருவதாக மட்டுமல்ல, வீரர்கள் தங்கக் கூடிய கோட்டையைப் போலவும் இருக் கிறது. முழுதும் மர உத்திரங்களும், பக்குவப்படுத்தப் பட்ட சுண்ணாம்பும், அழுத்தமான செங்கல்லும் கொண்டு கட்டப்பட்ட கட்டிடம் அந்த மனோரா. மர உத்திரங்கள் கால வெள்ளத்தில் உளுத்துவிடக் கூடும் என்பதற்காக- அவைகளில் கயிறுகளை சுற்றி அதன் மீது கல் அடுக்கி சுண்ணாம்பு பூசியிருக்கிறார்கள் என்பது மனோராவில் பழுது அடைந்துள்ள பகுதிகளைக் காணும்போது தெளிவாகும். சுண்ணாம்பு உதிர்ந்து விட்டிருக்கிறது. கல் உடைந்து போயிருக்கிறது. மரத்தில் சுற்றப்பட்ட கயிறு மட்டும் இன்றைய தினம் திரிக்கப்பட்ட கயிறுபோலத் தெரிகிறது. மனோராவிலே ஒரு பாதாளக் குகையிருந்து மூடப்பட்டு விட்டதாக- அந்தக் குகையிருந்த அடையாளத்தையும் உத்தேசமாகக் காட்டுவார்கள். அந்தக் குகையில் நுழைந் தால் அருகே உள்ள மருங்கப் பள்ளம் என்ற ஊருக்கு போக முடியுமாம். - ந
பக்கம்:புதையல்.pdf/9
Appearance