பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108 / புத்தரின் வரலாறு

இறுமாப்புள்ள அரசியார் வர மறுப்பார். ஒரு சமயம், அரசியார் வெளுவனத்தில் ஒருபுறம் உலாவிக்கொண்டிருந்தபோது, விம்பசார அரசன் அரசியாரைப் புத்தரிடம் அழைத்து வந்தார்.

ததாகதர், அரசியாரின் அழகைப் பற்றிய துரபிமானத்தை நீக்கக் கருதி,தமது இருத்தி சக்தியினாலே ஆகாயத்திலே ஒரு அழகான தெய்வ மகள் தோன்றும்படிச் செய்தார். அவ்வாறு தோன்றின அழகான தெய்வ மகளை அரசியார் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தபோது, அப்பெண் உருவம், இளமைப் பருவம் நீங்கி நடுத்தர வயதடைந்தது. பிறகு நடுத்தரவயது நீங்கி கிழப்பருவம் அமைந்தது. பின்னர் கிழப்பருவத்திலே அப்பெண் உருவம் செத்துப் போயிற்று. இக்காட்சியைக் கண்ட கேமை என்னும் அரசியாருக்குத் தமது அழகைப் பற்றிய இறுமாப்பு நீங்கியது.

பகவன் புத்தருடைய உபதேசத்தைக் கேட்க வேண்டும் என்னும் எண்ணம் உண்டாயிற்று. அப்போது ததாகதர் சில சூத்திரங்களை ஓதினார். அதைக் கேட்ட அரசியார் அர்ஹந்த நிலையையடைந்தார். அந்நிலையடைவதற்கு முன்பு மாரன் அரசியாரை மருட்டினான். ஆனால் மாரனை வென்று அர்ஹந்த நிலையையடைந்தார் அவர்.

அலுவலகச் சமயத்தார்

பகவன் புத்தருக்கு எதிரிகளாக ஆறு குருமார்கள் இருந்தார்கள். அவர்கள் பூரணகாசிபர், மக்கலி கோசாலர், அஜித கேசகம்பளி, பகுட கச்சாயனர், நிகந்த நாதபுத்திரர், சஞ்சய பெலட்டிபுத்திரர் என்பவர்கள். இந்த அறுவரும் வைசாலி நகரத்தாரால் தங்கள் நாட்டில் ஏற்பட்டிருந்த கொள்ளை நோயைத் தீர்ப்பதற்காக வரவழைக்கப் பட்டு, அவர்களால் அந்நோய் தீர்க்கப்படாமல் போகவே, அவர்கள் மேலே கூறப்பட்டதுபோல பகவன் புத்தரை அழைக்க அவர் சென்று அந்நோயைப் போக்கினார்.

இவர்களுக்கு ஏராளமான சீடர்கள் இருந்தும் இவர்கள் பகவன் புத்தருடைய செல்வாக்கையும் சிறப்பையும் கண்டுபொறாமை கொண்டார்கள். இவர்கள் விம்பசார அரசனிடம் செல்வாக்குப்பெற எவ்வளவோ முயன்று பார்த்தும் வெற்றி பெறாமல் சிராவத்திநாட்டு அரசன் பிரசேன்ஜித்து என்பவனிடம் செல்வாக்குப் பெறலாம் என்று நினைத்து அவனிடம் சென்றார்கள். சென்று தங்களுடைய இருத்தியினால் சில அதிசயங்களை உண்டாக்கிக் காட்டி அவ்வரசனைத் தங்கள் பக்கம் வசப்படுத்த முயன்றார்கள். இதையறிந்த பகவன் புத்தர், சிராவத்திக்குச் சென்று அரசன் முன்பும்