பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 119

பகவன் புத்தர் இராசவீதி வழியே வரும்போது அந்த மதயானையை அவர்மேல் ஏலிலிட்டான். இராசகிருக நகரத்தின் வீதியில் அந்த மதயானை மூர்க்கத்தனமாக வெறிகொண்டோடியது. அதனைக் கண்ட ஜனங்கள் அஞ்சி ஓடினார்கள். மதயானை, பகவன் புத்தரின் அருகில் வந்தபோது, அவருடைய திருமேனியில் இருந்து வெளிப்படும் தெய்விக ஒளியினால், அந்த யானை மதம் அடங்கிக் கோபம் தணிந்து சாந்தம் அடைந்தது. அது, தும்பிக்கையைத் தாழ்த்தித் தலைவணங்கிற்று. பிறகு சாந்தமாகத் திரும்பிப் போய்விட்டது. இவ்வாறு தேவதத்தன் பகவன் புத்தரைக் கொல்லச் செய்த சூழ்ச்சிகளும் முயற்சிகளும் பயன்படாமற் போயின.

பிளவு உண்டாக்கியது

தனது சூழ்ச்சிகள் நிறைவேறாமற் போகவே தேவதத்தன் வேறுவிதமாகச் சூழ்ச்சிசெய்தான். பௌத்த சங்கத்திலே பிளவு உண்டாக்கி அதனால் வெற்றியடையலாம் என்று எண்ணினான். பௌத்த சங்கப் பிக்குகளில் தன் பேச்சைக் கேட்கக்கூடிய சிலரை அழைத்து. பகவன் புத்தர் உடன்பட முயடிாத சிலபுதிய கொள்கைகளை அவர்களுக்குக்கூறி அவைகளைப் புத்தர் ஏற்றுக்கொள்ளச் செய்யும்படி அனுப்பினான். அவர்கள் சென்று புத்தரிடம் அக்கொள்கைகைளக் கூறி அவற்றை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டார்கள். பகவர் அவைகளை ஏற்றுக்கொள்ள மறுத்தார். இந்தப் பிக்குகள் புதிதாகப் பௌத்த மதத்திற்கு வந்தவர்கள். விநய முறைகளை அறியாதவர்கள். பகவன்புத்தர் மறுக்கவே, இவர்கள் தேவதத்தனுடன் சேர்ந்து அவனைத் தலைவனாக ஏற்றுக்கொண்டார்கள்.

தேவதத்தன் ஐந்நூறு புதிய பிக்குகளை அழைத்துக்கொண்டு அவர்களுக்குத் தலைமைப்பதவியை ஏற்று, கயா சீர்ஷ மலைக்குச் சென்றான். சென்று, பிக்குகளுக்கு உபதேசம் செய்தான். இந்தப் பிக்குகளின் கூட்டத்தில் சாரி புத்திர மகாதேரரும் மொக்கல்லான மகாதேரரும் இருந்தார்கள். இவர்களைக் கண்ட தேவதத்தன், இவர்களும் தன்னைத் தலைவனாக ஏற்றுக்கொண்டார்கள் என்று தவறாகக் கருதி, சாரிபுத்திர மகாதேரரை அழைத்து, பிக்குகளுக்கு உபதேசம் கொடுக்கும்படியும் தனக்குக் களைப்பும் தூக்கமும் வருகிறபடியால்தான் சென்று தூங்கப்போவதாகவும் கூறிச்சென்றான். சாரி புத்திரதேரரும் மொக்கலான தேரரும் பிக்கு சங்கத்தாருக்குப் போதனை செய்து அவர்களை பகவன் புத்தரிடம் திரும்பி வரும்படி கூறினார்கள். அவர்கள் பேச்சுக்களைக் கேட்ட அப்புதிய பிக்குகள்