பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 புத்தர் போதனைகள் பெண் வயது முதிர்ந்தவளா யிருந்தால், அவளை உங்கள் தாயாகப் பாவிக்கவும். இளமையாயிருந்தால், உங்கள் சகோதரியாகப் பாவிக்கவும். மிகவும் சிறுமியா யிருந்தால், உங்கள் குழந்தையாகப் பாவிக்கவும். ஆடவர்களின் காமம் கொடுரமானது, அதைக் கண்டு அஞ்சவேண்டும்; ஆதலால் இடைவிடா முயற்சி என்னும் வில்லைக் கையில் எடுத்துக் கொண்டு, ஞானம் என்னும் கூரிய அம்புகளைத் (தயாராகத்) தொடுத்து வைக்கவும்.