பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 131. பிக்குகளே! மனப்பூர்வமாக (வேண்டுமென்றே). செய்யப்பெற்ற சகல கருமங்களையும் அழித்து விடவே முடியாது என்று நான் உறுதியாய்ச் சொல்கிறேன்" அப்படி அழித்தல் என்பது, இந்தப்பிறப்பிலோ, வேறு பிந்திய பிறப்பிலோ, உரிய சக்தர்ப்பத்திலேயே (கருமப் பயனை அநுபவிப்பதன் மூலம்) சாத்தியமாகும்."

இயற்கையிலுள்ள மற்றப் பொருள்களைப் - போலவே மனிதனின் வாழ்க்கையும் காரண காரிய விதிக்கு உட்பட்டதாகும். இறந்த காலத்தில் விதைத் ததை இப்போது அறுவடை செய்ய வேண்டும். எதிர் காலத்தில் விளைவது இப்போது விதைப்பதேயாகும்." 事 இந்த உடல் அசுத்தம் கிறைந்ததுதான், இதன் முடிவு மயானந்தான்; ஏனெனில் இது கிலையற்றது. மறுபடி இது தன் மூலப் பொருள்களாகிய கந்தங் களாகப் பிரிக் து விடுவதே விதியாகும். ஆயினும் வினைப் பயனைத் துய்ப்பதற்கு இதுவே களனாக விளங்குவதால், பாவத்தின் கருவியாக இல்லாமல், இதைத் தருமத்தின் கருவியாகச் செய்து கொள்ளும் சக்தி உன்னிடம் உளது. உடல் இன்பங்களில் திளைத் திருத்தல் கன்மையன்று. ஆனால் உடலின் தேவை களைப் புறக்கணித்து, அசுத்தத்தின் மேலே குப்பை யைக் கொட்டுவதுபோலே கடந்து கொள்வதும் நன்மையன்று. சுத்தம் செய்யாமலும், எண்ணெய் ஊற்றாமலுமுள்ள விளக்கு அணைந்து விடும்; அது