பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர்போதனைகள் 67 (ԼAtդա-յո Յ5), பூரண வளர்ச்சியோ முதிர்ச்சியோ பெற முடியாது-எவ்வகையிலும் அது இயலாத காரியம்!" 출 பிக்குகளே! அறிந்தவன் ஒருவனுக்கு, பார்க்கும் வல்லமையுள்ள வ னுக்கு, ஆஸ்வங்களை அழித்து விட இயலும்; அறியாதவனுக்கும், பார்க்க வல்லமையற்ற வனுக்கும் அது இயலாது. அறிந்தவனுக்கும், பார்வை யுள்ளவனுக்கும் ஆஸ்வங்களை அழிக்க முடியும் என்று சொல்கிறேன். ஏன்? அறிவோடு ஆராய்ந்து பார்ப்பதை யும், அறிவில்லாமல் பார்ப்பதையும் அது பொறுத்திருக் கின்றது.8 蚌 பிக்குகளே! அறிவில்லாமல் பார்ப்பவனுக்கு, அது வரை தோன்றியிராத ஆஸ்வங்கள முளைக்கின்றன, முன் தோன்றியுள்ள ஆஸ்வங்கள் அதிகமாகின்றன. அறிவோடு ஆராய்ந்து பார்ப்பவனுக்கு, அதுவரை தோன்றியிராத ஆஸ்வங்கள் முளைப்பதில்லை, முன் தோன்றியுள்ள ஆஸ்வங்களும் அதிகப் படுவதில்லை." 출품 பிக்குகளே! கற்காட்சியால் ஆஸ்வங்கள் இருக்கின்றன, அடக்கி ஒழிக்க வேண்டிய ஆஸ்வங்கள் இருக்கின்றன, சரியான முறையில் உபயோகித்து அகற்ற வேண்டிய ஆஸ்வங்கள் இருக் கின்றன, பொறுத்திருந்து அகற்ற வேண்டிய ஆஸ்வங்கள் இருக்கின்றன , விலக்கியே ஒதுக்க வேண்டிய ஆஸ்வங்கள் இருக்கின்றன, (தோன்றிய பின்) நீக்க வேண்டிய ஆஸ்வங்கள் இருக்கின்றன, பயிற்சியினால் நீக்கவேண்டிய ஆஸ்வங்களும் இருக் ஒதுக்கவேண்டிய கின்றன.சி ---"