பக்கம்:புத்த ஞாயிறு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 5笼。

இளைஞன் : உன் தந்தை உன்னை அழைத்ததிலிருந்து அந்தப் பெயரைத் தெரிந்துகொண்டேன். உன்னுடைய பெயரின் அர்த்தத்தில் இரண்டு அழகுகள் அடங்கி இருக்கின்றன. உன்னுயை அழகு ஒர் அர்த்தம். அந்தப் பதத்தின் பொருளுக்கே இயல்பாக உள்ள அழகு இன்னும் ஒர் அர்த்தம். நீயோ, பூமாலையைக் காட்டி லும் அழகாயிருக்கிருய் கோதை : உங்கள் பெயர்? இளைஞன் : மணவாளன், உன்னைப் போலவே இந்த விழா வுக்காக வந்தவன், நானும் இதே சத்திரத்தில்தான் தங்கியிருக்கிறேன். கோதை : எத்தனை அபூர்வமான பொருத்தம்...பார்த்தீர். களா? என்னுடைய பெயராய் வாய்த்திருக்கும் பதத் துக்குப் பூமாலை என்று பொருள் கூறினீர்கள். உங்க ளுடைய பெயருக்கு மனத்தை ஆள்பவள் என்று: பொருள். மணத்தை ஆள்கிறவர் பெயர்தானே மண வாளர்? பூமாலையின் மணத்தை...? . (மேலே பேச நாணமுற்றுக் கண்களால் குறிப்பிற பேச முயல்கிருள்; இளைஞன் : நீ வெறும் கழைக் கூத்திதானே என்று நினைத் தேன். உனக்குப் பாட்டும் நன்ருக வருகிறது. நல்ல குரல். பழக்கப்படுத்திக் கொண்டால் இசையிலும் நீ. வித்தகம் பெறுவாய். - கோதை . சற்றுமுன் நீங்கள் பாடிக் கொண்டிருந்தீர்களே: அதைக் காட்டிலும் சிறந்த இசை ஒன்று உலகில் இருக்க முடியுமா? - இளைஞன் : நான் பாடுவதில் ஆச்சரியமென்ன? இசைக்

கலை எங்கள் குலதனம். அதோடு சொந்தமாகக் கவியும். இயற்றிப் பாடுவேன் நான். - - கோதை : இன்று என்னுடைய கழைக்கூத்து அற்புதமா * யிருந்ததாகப் பாளையத்துச் சிற்றரசர்கள் பவழமாலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/55&oldid=597418" இலிருந்து மீள்விக்கப்பட்டது