பக்கம்:புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்க்கையிலே.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கிண்டல்


அதில் ஓர் சுவை-நயம் ஏராளமாகக் காணலாம். வார்த் தைகளும் ரத்தினச் சுருக்கமாக-மிக அழகாக-ஹாஸ்ய மாக வெளிவரும். அவர் பேச்சில் தயக்கமோ-தடையோ ஏற்படாது. கடல் மடை திறந்தாற்போல்தானிருக்கும்.


இன்னும் சில சந்தர்ப்பங்களில் கருத்தோடு குறும்பு வார்த்தைகள் பிரயோகிப்பார். ஒரு சமயம் கும்பகோணம் மகாமகத்தைப் பற்றிக் கண்டித்து, டாக்டர் ராஜன் (இப்போதைய உணவு மந்திரி) ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்தக் குறிப்பைப் பார்த்ததும் எனக்கு வியப்பும்-திகைப்பும் ஏற்பட்டது. டாக்டர் ராஜன், பகுத்தறிவுக் கொள்கையில் பற்றுக் கொண்டு கண்டிக்கிறாரா? அல்லது டாக்டர் என்ற முறை யில் சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு கண்டிக்கிறாரா? என்று எண்ணிக் கவிஞரிடம் இதைக் கூறி அபிப்பிராயம் கேட்டேன். அதற்குக் கவிஞர் கூறிய காரணத்தைக் கேட்டால் ஒரே வியப்பாக இருக்கும். மகாமக விழா, சிவமதம் சம்பந்தப்பட்டது; டாக்டர் ராஜன் வைஷ்ணவ மதத்தவர்; அதனால்தான் அதை எதிர்க்கிறார்' என்றார் கவிஞர். இந்தக் காரணத்தை ஹாஸ்யமாக எண்ணு வதா? அல்லது கருத்து நிறைந்த குறும்பு என்ற கருதுவதா?

12 கிண்டல்

கவிஞர் எப்போதும் கிண்டலாகப் பேசுவார். இந்த மாதிரி கிண்டலாகப் பேசுவதில் அவருக்கு அலாதிப் பிரியம்.

2]