பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 261, அல்லவோ வேர் ! இதனால்தான் தாம் படைத்த நூல்களில் எத்தனை காதல் இணைகளைக் காட்டுகின்றார். பாவேந்தர். குடும்பவிளக்கில் நகைமுத்து - வேடப்பன் புரட்சிக்கவியில் அமுதவல்லி - உதாரன், இன்னும் எத்தனை எத்தனை இணையான ஆண் பெண்கள். காதல், மணத்தில் முடிவடைய வேண்டுமானால் ஆண் பெண் இருபாலரிடமும் உறுதி வேண்டும். பெண்களுக்கு மிக அதிகமாக வேண்டும். பெண்கள் தங்கள் உறவினர் களை நீங்கி உடன்போக்குச் சென்றதாக நம் இலக்கியங் களும் இலக்கணங்களும் கூறுகின்றன. காதலுக்கு எதிர்ப்பு ஏற்படும் நிலையில் அந்த அளவிற்குப் பெண்ணுக்கு உறுதி வேண்டும். அவளை உடன் அழைத்துச் சென்று வாழ்க்கைத் துணையாக ஏற்கும் உறுதி ஆண்மகனுக்கு வேண்டும். உடன்போக்குப் போகாதவர்கள் நேரம் வரும்போது தங்கள் காதலை உறுதியாக எடுத்துக் கூறிவிட வேண்டும். இன்றைய காதலர்கள் பெற்றோருக்குத் தெரியாமல் காதல் செய்ய அஞ்சுவதில்லை. ஆனால் பெற்றோரிடம் தெரிவிப் பதற்கு அஞ்சுகின்றனர். எங்கு அச்சம் வேண்டுமோ அங்கு விடுத்து எங்கு அச்சம் கூடாதோ அங்கு அச்சப்படுகின்றனர். செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்" என்று வள்ளுவர் கூறுவதற்கிணங்க அவர்கள் காதல் நிறைவேறாமல் கெடுகின்றது. இதனை உணர்ந்த, பாவேந்தர் நகைமுத்து மூலம் உணர்த்துகின்றார். பெருமாள் தாத்தா மூலம் தன் காதல் தன் பெற்றோருக்குத் தெரிந்து விட்டதை அறிகின்றாள். நகைமுத்து. அந்நிலையில் அவள் வேறே எவனையும் விரும்பேன் என்றும் வேடப்பனைத்தான் விரும்பினேன் என்றும் சட்ட வட்டமாய்ச் சாற்றினாள் -பாரதிதாசன், குடும்பவிளக்கு, பகுதி 3, ப. 28.