பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என்பதன் மூலம் உணர்த்துகின்றார்; குழந்தை மணத்தை மறுக்கின்றார். பொதுவுடைமை அரசு வரலாற்றுக் காலத்திற்கும் முற்பட்ட காலத்தில் மனிதன் தனித்தனியாக வாழ்ந்து கொண்டு வந்தான். பின்பு சிறிது சிறிதாகச் சேர்ந்துவாழக் கற்றுக் கொண்டான். முதலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தனர். பின்பு குடும்பமானார்கள். குடும்பங்கள் இணைந்து ஊராகியது. ஊர்கள் இணைந்து நாடாகியது. இவ்வாறு படிப்படியாக ஒன்று சேர்ந்து வாழக் கற்றுக் கொண்டான். இன்று நாட்டு எல்லை யையும் தாண்டி உலகம் தழுவி வாழக் கற்றுக் கொண்டான். மக்கள் கூட்டம் கூட்டமாக வாழத் தலைப்பட்ட அந் நிலையில் அரசு தோன்றியது. அதாவது ஊர்கள் தோன்றியவுடனேயே அதனைப் பாதுகாக்க அரசும் தோன்றியிருக்க வேண்டும். இதனைத் தொன்மை மிக்க கிரேக்கத்தில் நிலவிய ஸ்பார்ட்டா, ஏதன்ஸ் போன்ற நகர அரசுகள் உணர்த்துகின்றன. இவ்வாறு தோன்றிய அரசுகளே பின்பு நாட்டரசானது. அதனை வரலாறு தெளிவாக உணர்த்துகின்றது. முற்காலத்தில் அரசு செய்யும் ஆள்வோனை அடிப் படையாகக் கொண்டு அரசுகளைப் பல்வேறு முறையில் பாகுபாடு செய்தனர். வரம்பிற்குட்பட்ட முடியாட்சி, வரம்பில்லா முடியாட்சி, சர்வாதிகார ஆட்சி, இராணுவ ஆட்சி, பிரபுத்துவ ஆட்சி என்பன அவற்றுள் சில. அரசியல் பற்றிய சிந்தனை வளர வளர ஆள்வோனை அடிப்படை யாகக் கொண்டு பாகுபாடு செய்வதை விடுத்து ஆளும் முறையை அடிப்படையாகக் கொண்டு பாகுபாடு செய்தனர். பொதுவுடைமை அரசு, குடியரசு, கம்யூனிச அரசு, அதிபர் அரசு (முதலாளித்துவ அரசு) போன்றவை அவற்றுள் சில.