பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிதாசன் பற்றி டாக்டர் மு. வ. இருபதாம் நூற்றாண்டில் தமிழில் பாரதியாருக்கு. அடுத்தபடி புகழ்பெற்று விளங்கும் கவிஞர் புரட்சிக் கவிஞர்" எனப்படும் பாரதிதாசன் (1891–1964). அவருடைய பெயர் கனகசுப்புரத்தினம். புதுச்சேரியில் பாரதியார் அரசியல் காரணத்தால் ஒதுங்கியிருந்த காலத்தில் அவருடன் நெருங்கிப் பழகி அன்பையும் பாராட்டையும் பெற்று, அதனால் பாரதிதாசன் என்று புனைபெயர் வைத்துக் கொண்டார். அவருடைய வாழ்வில் அரசியல் கட்சிகளின் தொடர்பும் ஏற்பட்டது; தமிழாசிரிய ராகப் பணிபுரிந்தார்; இதழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார்; திரைப்படத் துறையிலும் தொடர்பு இருந்தது. எல்லா வற்றிற்கும் மேலாக அவருக்குத் தமிழ் மக்களின் உள்ளத்தில் வாய்த்த இடம் புரட்சிக் கவிஞர்' என்பது. ஆகும். அவருடைய கவிதைகளில் இனிய இசை நயம் உண்டு; உணர்த்தும் கருத்துகளில் உணர்ச்சிப் புயல் வீசும். அவர் கையாளும் சொற்கள் மக்களுக்கு நன்கு பழக்கமான எளிய சொற்களே. ஆனால் அந்தச் சொற்கள் அவருடைய கவிதையில் அமையும்போது, நிகரற்ற வேகம் கொண்டு நிற்கும்; ஆற்றல் மிகுந்த கூரிய கருவிகளாகிவிடும்; உணர்த்த, விரும்பியவற்றை அழுத்தமாக, திட்பமாக உணர்த்தும் வன்மை அந்தச் சொற்களுக்குப் பிறந்துவிடும். தமிழில் மரபாக வந்துள்ள யாப்பைப் பெரும்பாலும் பயன்படுத்தி யுள்ளார்; நாட்டுப் பாடலில் பயின்ற சிந்து முதலிய வற்றையும் கையாண்டுள்ளார்; இசையுலக மெட்டு: களையும் எடுத்தாண்டிருக்கிறார். புதுவகையான செய்யுள் வகைகளையும் இயற்றியிருக்கிறார். வெளியீடு: தமிழ் இலக்கிய வரலாறு, இரண்டாம் பதிப்பு. பக்கம் 349. புதுதில்லி, சாகித்திய அக்காதெமி.

=