உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 அடுத்த நாள் அவர்கள் அறுவடை புரட்சியாளர் பெரியார் செய்துகொண்டிருந்த வயலுக்கு அனுமந்தபுரம் பண்ணை கிருஷ்ணமூர்த்தி அய்யர் வந்தார். 'நேற்று மாநாட்டில் போய் சாப்பிட்ட பயல்களையெல்லாம் இங்கே உதைத்துக்கொண்டுவா' என்றார். அப்படியே அவர்களை உதைத்து மரத்தில் கட்டினார்கள். உடனே ஏறத்தாழ இருபது பேர்களை மொட்டையடித்தார்கள். திருமணமாகா தவர்களுக்கு அரை மொட்டையடித்தார்கள். சாணிப்பால் ஊற்றினார்கள். சாணியைக் கரைத்து, மனிதன் வாயில் ஊற்றிக் குடிக்கும்படி அடிப்பது, தஞ்சைத் தரணியின் தனிக் கொடுமை. இக் கொடுமையை 6-2-38 நாளைய 'குடி அரசு' வெளியிட்டு அம்பலப் படுத்தியது. பெரியார் ராமசாமி குடி அரசு' வாயிலாக கொடுமைகளை நாடறியச் செய்ததோடு நின்றாரா? இல்லை. முற்போக்குச் சிந்தனைகளையும் நடவடிக்கைகளையும் சாதாரண பொது மக்களுக்கு அறிவிக்கும் கருவியாகக் 'குடி அர 'சை பயன்படுத்தினார். அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பே, உலகப் புகழ் நாத்திகர், இங்கர் சாலின் கருத்துகளை தமிழில் தந்தது 'குடி அரசு.' பெட்ரண்ட் இரஸலை தமிழில் காட்டியது தன்மான இயக்கம். லெனினுடைய சிந்தனைகளை முதலில் தமிழில் வெளியிட்டது 'குடி அரசு. 'மற்றும் வால்டேர், ரூசோ, போன்றவர்களின் கருத்துகளை தமிழாக்கிப் பரப்பியது பெரியாரின் 'குடி அர’சாகும். குடி அரசாகும். அது, இந்தியச் சிந்தனையாளர்களையும் நமக்கு அறிமுகப்படுத்தியது. சர் பி.சி. ராய் என்னும் அறிஞர் 1929 நவம்பரில் சென்னைக்கு வந்தார். மைலாப்பூரில் ரானடே மண்டபத்தில் உரையாற்றினார். அவ் வுரையில், சென்னைவாசிகள் எவ்வளவு புத்திசாலிகளாயிருந்தும் உபயோகமற்ற விஷயங்களில், விதண்டாவா தமும் குதர்க்க புத்தி யும் காட்டுகிறார்கள். 'சீனாவில் சாதி வேற்றுமை கிடையாது. உயர்ந்தோர் தாழ்ந் தோர் கிடையாது. சீன மக்களிடையே தீண்டாமையே கிடை யாது. 'சென்னையில்தான் சாதி வருண வேற்றுமை மிகக் குரூரமாக இருக்கிறது. பிராமணர் உயர்வு; பிராமணரல்லாதார் அவருக்குக் கீழ் என்று பேதம் பாராட்டும் நம் நாட்டவரை, தென்னாப் பிரிக்காவில் வெள்ளையர் வேற்றுமை பாராட்டக்கூடாது என்று கிளர்ச்சி செய்பவர்களை உங்கள் நாட்டில் என்ன ஒழுங்கு நடக் கிறது என்று அவர்கள் திருப்பிக் கேட்டார்களாம். இதை,