உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X நூன்முகம் பொதுச் செயலாளர் திரு. கி. வீரமணிக்கு பெரிதும் நன்றி யுடையேன். உரிய செய்திகள் இங்கிங்கே உள்ளன என்று அடிக்கடி சுட்டிக் காட்டி உதவிய திரு.நா.சு. சம்பந்தம் நன்றிக்குரியவர். நூலகர், திரு. தமிழ்த்துரை, தன்னுடைய சொற்பொழிவுக்கு ஆயத்தஞ் செய்வதுபோல, குறிப்பெடுத்துக் கொடுத்து உதவினார். அவருடைய உதவி என் பணியை விரைவுபடுத்தியது. அவருக்கும் நன்றி. திரு. கலியன் பூங்குன்றன் அவ்வப்போது செய்த உதவியை யும் மறக்க இயலாது. அவருக்கும் நன்றி சொல்லுகிறேன். சென்னைப் பல்கலைக் கழக நூலகர் திரு. P. A. மோகன்ராசு அவர்கள், இந் நூலுக்கு 'சொல்அடைவு' ஆயத்தஞ்செய்து கொடுத்தமைக்கு என் நன்றி உரியதாகும். தட்டச்சுப்படிகள் முழுவதையும் பொறுமையாக இரண்டு மூன்று முறை படித்துப் பார்த்து, எதை எதை எங்கெங்கே, பகுத்து. இணைக்கலாம் என்று சிந்தித்து, ஆலோசனை கூறி, இந்நூல் இவ்வுருவில் அமைய பல நாள் உடனிருந்து உதவிய திரு. உ. அய்யாசாமிக்கு எப்படி நன்றி தெரிவிப்பது? செய்தி, கருத்துக் குவியல்களை முறைப்படுத்தி, ஒழுங்காக அமைத்து நல்லுருக்கொடுத்த அவருக்குப் பெரிதும் நன்றியுடையேன்; படிப்போர் நன்றியும் உரியதாகும். சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தரும் என்னுடைய நெடுநாளைய நண்பருமான பேராசிரியர் ஜி. ஆர். தாமோதரன் அவர்கள் இந் நூலுக்கு சிறந்ததொரு அணிந்துரையை வழங்கிப் பெருமைப்படுத்தியதற்கு நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரி வித்துக்கொள்ளுகிறேன். L இந்நூலை பெரியாரின் முழுமையான நீண்ட வாழ்க்கை வரலாறாகக் கொள்ளற்க. அப்புரட்சியாளரின் மலர்ச்சியை மக்க ளுக்கு விளக்கும் முயற்சியாக மட்டும் ஏற்கும்படிக் கோருகிறேன். சென்னை 600 030 நெ.து.சுந்தரவடிவேலு