106 இராசகோபாலாச்சாரியார் அமைந்தது. புரட்சியாளர் பெரியார் தலைமையில் அமைச்சரவை பார்ப்பனரல்லாதாரில் மேல் படிக்கட்டுகளில் உள்ளவர்கள், கல்வி பெற்றுப் போராடி பார்ப்பனரின் பதவி ஏகபோகத்திற்கு ஓரளவு இடையூறாகிவிட்ட நிலை, பிரதமர் இராசகோபாலாச்சாரி யாரின் நெஞ்சில் உறுத்திக்கொண்டிருந்தது. கட்டாய இந்தி திணிப்பு இந்நிலையில், பின்தங்கியவர்களில் ஏராளமானவர்கள், உயர் நிலைப் படிப்பைப் பெற்றுவிட்டால், போட்டி அதிகரிக்கும்; பங்குச் சண்டை முற்றும்; பார்ப்பனர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்கு குறை யும். ஆகவே உயர்நிலைப் பள்ளிகளில் படிப்போர் எண்ணிக் கையை மட்டுப்படுத்துவது, போட்டியைக் குறைக்கும் என்று அவர் எண்ணியிருக்கக்கூடும். படிப்புப் பெருக்கைக் குறைக்க கட்டாய இந்தியை கருவியாகக்கொண்டார். கட்டாய இந்தியை எதிர்த்து நடந்த நீண்ட இந்தி எதிர்ப்புப் போரைப்பற்றி பின்னர் கவனிப் போம். பெரியாரும் தமிழ் மக்களும் கட்டாய இந்தியை எதிர்த்து நீண்ட போராட்டத்தை நடத்தினர். அப்போது கட்டவிழ்த்துவிடப்பட் டிருந்த அடக்குமுறைகளும் சிறைக் சிறைக் கொடுமைகளும் மக்கள் மனதில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கின. அந்நிலையில், சென்னையில், 1938ஆம் ஆண்டு டிசம்பர் 29, 30, 31 நாட்களில், நீதிக் கட்சியின் பதினான்காவது மாநாடு கூடிற்று. அம் மாநாட்டில் அய்ம்பதாயிரத்திற்கு மேலான மக்கள் கூடியிருந்தார்கள். இம் மாநாட்டுத் தலைவராக இந்திப் போராட்டத் தலைவர் பெரியாரை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். ஆனால், மாநாட்டின்போது, பெரியார் சிறைப்பட்டிருந்தார். நீதிக் கட்சியின் வரலாற்றில் அம் மாநாடே தலைசிறந்தது. நீதிக் கட்சியின் தலைமை மாநாட்டுப் பந்தலில் பெரியார் உருவம் நாற்காலியில் வைக்கப் பட்டது. வழக்கம்போல், பெரியாரைத் தலைவராக இருக்கும்படி முன்மொழிதலும் வழிமொழிதலும் ஆன சடங்கு நடந்தது. பெரியார் சிறைபுகுமுன்பே எழுதி அனுப்பியிருந்த தலைமை யுரையை சர். பன்னீர்செல்வம் படித்தார். அப்போது பன்னீர் செல்வம் கழுத்தில் போடப்பட்ட மாலையை அவர் பெரியாரின் உருவச்சிலையின் பாதத்தில் படைத்தார். மாநாட்டில் கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று,
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/118
Appearance