உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிக் கட்சி தலைமை திராவிட நாடு கோரிக்கை 111 மற்றொரு முடிவு: 'அதன் (திராவிடர் கழகத்தின்) முக்கிய கொள்கைகளில், திராவிட நாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம், மத்திய அரசாங்கத்தின் ஆதிக்கம் இல்லாததும், நேரில் பிரிட்டிஷ் செக்ரட்டரி ஆப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதுமான ஒரு தனி நாடாகப் பிரிக்கப்பட வேண்டியது என்ற கொள்கை முதற் கொள்கையாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது' என்பதாகும். அரசியல் மேலே கண்ட தன்மைகளை நீதியாகக்கொண்ட சட்டங்களையும் மாற்றி அமைக்க முயற்சிக்க வேண்டுமென்று இம் மாநாடு முடிவெடுத்தது. வருணாசிரம தர்மம் என்கிற கொள்கையையும் அதன் பேரால் ஏற்படுத்தப்பட்ட பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கிற பிரிவினையையும் இக்கழகம் ஒப்புக்கொள்வ தில்லை என்பதோடு, அக்கொள்கைகள் எந்த முறையில் இருந் தாலும் ஒழிக்கப்பட வேண்டியவைகள் என்றும் இம் மாநாடு முடிவு செய்தது. மனிதனை மனிதன் தீண்டாமை, பார்க்காமை, ஒன்றாயிருந்து உண்ணாமை, தொழுகாமை முதலிய தன்மைகளை ஒழிக்க வேண்டுமென்ற முடிவுக்கு இம் மாநாடு வந்தது. மக்கள், தங்கள் பெயர்களுக்குப் பின்னால் சாதிப் பிரிவைக் காட்டும் சொற்களையும் மற்றும் குறிகளையும் விட்டுவிட வேண்டு மென்று இம் மாநாட்டினர் முடிவு செய்தனர். இந்த கடைசி முடிவும் முதல் மாகாண சுயமரியாதை மாநாடு முதல் எல்லா மாநில மாநாடுகளிலும் மாவட்ட, வட்ட மாநாடு களிலும் ஏற்கப்படும் முடிவேயாகும். 29-9-45இல் திருச்சியில் பெரியார் ஈ. வே. ராமசாமியின் தலைமையில் கூடிய 17ஆவது திராவிடர் கழக மாநாட்டில், இந்த மாகாணத்திலே, சில கோயில்களிலே, ஆதி திராவிடர்களை அனுமதித்து சில கோயில்களில் அனுமதிக்காமலும் இருக்கும் போக்கை இம் மாநாடு கண்டிப்பதோடு மாகாணத்திலுள்ள எல்லாக் கோயில்களிலும் ஆதி திராவிட மக்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்னும் முடிவிற்கு வந்தார்கள். அடுத்து, திராவிடர் கழகத்தின் 18ஆவது மாகாண மாநாடு 8,9-5-48 நாட்களில் தூத்துக்குடியில் நடைபெற்றது. அதில் ஒன்பதாவது முடிவாக, சாதிகள் என்பவையே, இந்நாட்டிலிருந்து