நீதிக் கட்சி தலைமை 113 ராலோ, எந்த விதமான கமிட்டியில் எப்படிப்பட்ட கவுரவ ஸ்தானம், அங்கத்தினர் பதவி, ஆலோசகர் பதவி அளிக்கப் பட்டிருந்தாலும் அவைகளையெல்லாம் உடனே இராஜினாமா செய்துவிட வேண்டும். தேர்தல் அல்லாமல், ஸ்தல ஸ்தாபனம் அதாவது ஜில்லா போர்டு, பஞ்சாயத்து போர்டு ஆகியவற்றின் தலைவர், உப தலைவர், அங்கத்தினர் ஆகிய சர்க்கார் நியமனம் பெற்றோ அல்லது நியமனம் பெற்ற அங்கத்தினர்களால் தேர்தல் பெற்றோ இருக்கிறவர்கள் எவரும் தங்கள் தங்கள் பதவிகளை உடனே இராஜினாமாச் செய்துவிட வேண்டும். சர்க்காரால் தொகுதி வகுக்கப்பட்ட எந்த விதமான தேர்தலுக் கும் கட்சி அங்கத்தினர்கள் நிற்கக் கூடாது. இதை ஏற்று ஒரு வாரத்தில் இதன்படி கட்டுப்பட்டு நடக்காதவர்கள் எவரும் தங்களுக்கு இக்கட்சியில் இருக்க இஷ்டமில்லை என்று கருதி, கட்சியை விட்டு நீங்கிக்கொண்டவர்களாகக் கருதப்பட வேண்டிய வர்கள் ஆவார்கள். சேலம் மாநாட்டை அடுத்து 1945இல் திருச்சியில் நடந்த மாகாண மாநாட்டில் சேலம் முடிவுகளை ஏற்றுக்கொள்வதாக முடிவு செய்யப்பட்டது. மேலும், (1) திராவிட நாடு (சென்னை மாகாணம்) சமுதாயம், பொரு ளாதாரம், தொழில் துறை, வியாபாரம் ஆகியவற்றில் பூர்ண சுதந்திரமும் ஆதிக்கமும் பெறவேண்டும். (2) திராவிட நாடும் திராவிட நாட்டு மக்களும் திராவிட நாட்டவர் அல்லாத, அன்னியர்களின் சுரண்டல்களில் இருந்து, ஆதிக்கத்திலிருந்து விடுபடுத்தப்பட்டு, காப்பாற்றப்பட வேண்டும். (3) திராவிட நாட்டிலுள்ள மக்கள் யாவரும் சாதி, வகுப்பு, அவை சம்பந்தமான உயர்வு தாழ்வு இல்லாமல், சமுதாயத்திலும் சட்டத்திலும் சம உரிமையும் சம சந்தர்ப்பமும் பெற்று சம வாழ்வு வாழச் செய்ய வேண்டும். (4) திராவிட நாட்டு மக்களுக்கு சமயம், சமயாச்சாரம், பழக்க வழக்கம் என்பவைகளின் பேரால், இருந்து வரும் பேத உணர்ச்சி, மூட நம்பிக்கைகள், ஆகியவைகள் மறையச் செய்து, அவர்களை தாராள நோக்கமும் நல்ல அறிவு வளர்ச்சியும் பெற்ற ஒன்றுபட்ட சமுதாய மக்களாகச் செய்ய வேண்டும். இவைகள் வெற்றி பெறுகிறவரை சாதி, சமய வகுப்பு பேதம் ஆகியவை உள்ள மக்களுக்கு நம்மிடம் முழு நம்பிக்கையும் நல்லெண்ணமும் ஏற்பட்டு, மேற்கண்ட முயற்சிகளுக்கு நம்மோடு 8
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/125
Appearance