116 புரட்சியாளர் பெரியார் மத்திய சர்க்காரின் தொழில் திட்டங்கள் அமைந்திருப்பதால், இந் நாட்டு மக்களின் எதிர்கால வாழ்வு செம்மையாக்கப்பட, திராவிட நாடு தனி நாடாகப் பிரிந்தாக வேண்டுமென்னும் திராவிடர் கழகத்தின் அடிப்படைத் திட்டத்தை கழகம் வலியுறுத்தியது. இம் மாநாட்டில் இனாம் ஒழிப்பிற்கும் ஒரு மசோதா விரைவில் கொண்டுவர வேண்டுமென்று வேண்டுமென்று அரசைக் அரசைக் கேட்டுக்கொள்ளும் முடிவொன்று செய்யப்பட்டது. கல்வித் துறையில் வகுப்புரிமை நீதிக் கட்சியும் பெரியாரும் பல்லாண்டுகள் தொடர்ந்து போராடி யும் ஒரு சிறுபான்மையோரின் ஆதிக்கம், நெடுநாள் விடுதலை பெற்ற பின்னரும் தொடர்ந்தது. இதோ அரசாங்க கல்வித் துறையின் இலட்சணம் பாரீர்: 1915 முதல் 1950 வரை சென்னை மாகாணத்தில் கல்வித் துறை யில் மொத்தம் 518 பதவிகள் இருந்தன. அதில் பார்ப்பனர்களுக்கு 400 பதவிகள்; பார்ப்பனரல்லாதாருக்கு 18 பதவிகளே; மற்ற நூறு முஸ்லீம், கிறுத்தவர், ஆங்கிலோ-இந்தியர்; ஐரோப்பியர் ஆகியோருக்கு. இதன் விளைவு. கல்லூரிகளில் பார்ப்பனர்களுக்கே தாராளமாக இடம் கிடைத்தது. காண்க: 1949-50ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட மாணாக்கர் பட்டியல் மொத்த சேர்க்கை பார்ப்பனர் இன்டர்மீடியட் பி.ஏ., பி.காம். பி.எஸ்ஸி. பி.ஏ., பி.எஸ்ஸி. ஆனர்ஸ் 13,117 4,422 3,610 1,394 1,791 837 656 318 பார்ப்பனர்கள், தங்கள் மக்கள் தொகைப்படி பெறவேண்டிய தைப்போல் 12 முதல் 17 விழுக்காடு வரை பிடித்துக்கொண் டார்கள். இருப்பினும் 1918ஆம் ஆண்டில் பார்ப்பனரல்லா தாருக்கு 14 விழுக்காடு இடம் கிடைத்தது மாறி, 1949-50இல் 64 விழுக்காடாக உயர்ந்தது, பெரியாரின் போராட்டத்தின் விளைவு அல்லவா? மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கை எப்படி? 1950ஆம் ஆண்டு, சென்னை மாகாண மருத்துவக் கல்லூரிகள் அனைத்திலுமாக 309 பேர்கள் சேர்க்கப்பட்டார்கள். அதில்
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/128
Appearance