உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்ணுரிமைப் பணி தந்தை பெரியார், சாதி ஏற்றத் தாழ்வுகளைத் தகர்த்து சமத்து வத்தை நிலைநாட்ட முயன்றதுபோல், பணக்காரர் ஏழைத் தன்மைகளை அழித்து சமதர்மத்தைத் தழைக்கச் செய்வதற்கு பாடுபட்டதுபோல், ஆணுக்குப் பெண் அடிமை என்னும் முறை யையும் அடியோடு மாற்றி, இரு பாலாரையும் ஒரு நிலை மக்களாக வாழவைப்பதற்கு வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். பெரியார் பொது வாழ்க்கைக்கு வந்த காலத்தில், பெண்கள் நிலை என்ன? நம் சமுதாயத்தில் பாதிப் பேர்களாகிய பெண் இனம், பன்னெடுங்காலமாக உரிமை இழந்து, கல்வி வாய்ப்புகளை இழந்து, சொத்துரிமையின்றி ஆணினத்திற்கு அடிமைப்பட்டு வாழும் முறையைப் பின்பற்றி வந்தது. இக்கொடிய முறைக்கு ஆதாரமாக சாத்திரங்கள் காட்டப்பட்டன. மனுவில் பெண்கள் மனு சாத்திரம் பெண்களை இப்படி நடத்தச் சொன்னதாகக் கேள்வி: சிறு வயதில், பெண்கள் பெற்றோர்க்கு அடிமை. பெண்களை பூப்படைவதற்கு முன்பே திருமணஞ்செய்து கொடுத்துவிடவேண் டும். பத்து வயதுக்குள் திருமணம் நடத்திவைப்பது உத்தமம். பன்னிரண்டு வயதுக்கு மேலும் திருமணஞ் செய்யாமல் வைத் திருப்பது பாபம். திருமணமான பெண், கணவனுக்கு அடிமை. கணவனுக்குப்பின் மகன்களுக்கு அடிமை. பிள்ளையில்லாத விதவை, மறைந்த கணவனுடைய மூத்த உறவினருக்கு அடிமை. வாழ்நாள் முழுவதும் அடிமையாக வாழவே, பெண்கள் படைக்கப் பட்டிருக்கிறார்கள். அப்படி வாழ்வதின் வழியாகவே, பெண்கள் பிறவிப் பயனை அடையமுடியும். இவை, சாத்திரத்தின் சாரம் என கருதப்பட்ட நடைமுறையின் படப்பிடிப்பு. குழந்தை மணம் முற்காலத்தில் குழந்தை மணமே இந்துக்களிடையே பரவலாக இருந்த நடைமுறை. பச்சைக் குழந்தைகள், சிட்டுக்குருவிகள் CO