132 வயது 3 முதல் 4 வரை 4 முதல் 5 வரை 5 முதல் 6 வரை 6 முதல் 10 வரை 10 முதல் 15 வரை 15 முதல் 20 வரை புரட்சியாளர் பெரியார் விதவைகள் எண்ணிக்கை 2,837 6,707 11,892 85,037 2,32,147 1,74,20,820 இவை 1921ஆம் ஆண்டின் அனைத்திந்திய குடிக் கணக்கு காட்டும் தகவல்கள்; கோரச் செய்திகள்; வேதனையால், வெட்கத் தால் தலை குனியவேண்டிய புள்ளி விவரங்கள். குழந்தை விதவை கள், அக்கால இந்தியாவின் கொடிய வடுக்கள். என்ன செய்ய; அவர்கள் விதி அப்படி! அடுத்த பிறவியிலாகிலும் சுமங்கலிகளாக இருக்க கருணையங்கடல் அருள்பாலிக்கட்டும். என்பதே நம் பதில்! இதில் மட்டுந் தாமரை இலைத் தண்ணீர் மனப்பான்மை. இத்தீமைக்கு வழிகாண முனைப்பே ஏற்படாது. மனைவி இறந்த மறுமாதமே, பெண் தேடுவான், ஆண் பிள்ளை. ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி. இதை இரு பாலாரும் ஒப்புக்கொண்டார். கள். முணுமுணுப்பின்றி, கண்ணீர் சிந்தி சிந்தி, சிறுகச் சிறுக, அணு அணுவாக நலியும் விதவைப் பெண்ணினம். குழந்தை மணம், முன்னர் இந்துக்களிடையே பரவியிருந்த கொடுமை. குழந்தை விதவைகள், இக்கொடுமையின் தீய விளைவு கள். இது, ஈ. வே. ராமசாமியின் குடும்பத்திலும் தலைகாட்டியது. குடும்பத்தில் புரட்சி ஈ.வே. ராமசாமியின் தங்கை பொன்னுத்தாய் என்பவருக்கு ஒரு பெண் இருந்தது. அப்பெண் அம்மாயி அம்மாளுக்கு ஒன்பது வயதிலேயே திருமணம் செய்துவிட்டார்கள். மாப்பிள்ளைக்கு வயது பன்னிரெண்டு. இத்திருமணம் 1909ஆம் ஆண்டு நடைபெற்றது. திருமணமான முப்பதாம் நாள், மாப்பிள்ளையை காலரா நோய் தாக்கிற்று. அதனால் அவர் மாண்டார். ஒன்பது வயதுப் பெண் விதவையானாள். அவ்விதவைக் குழந்தை அலறி அழுதது. "மாமா, நான் திருமணம் வேண்டுமென்று கேட்டேனா? என்னை ஏன் இக்கதிக்குத் தள்ளிவிட்டீர்கள்?' என்று புலம்பியது. ஈ. வே. ராமசாமியின் நெஞ்சை நெகிழ்வித்தது; புரட்சி எண்ணம் மின்னிற்று; வெளியில் யாரிடமும் சொல்லாமல் வைத்திருந்தார்.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/144
Appearance