பெண்ணுரிமைப் பணி 135 பாத்தியம், தத்து எடுத்துக்கொள்ளல், இவைகளில் ஆண் பெண் இரு பாலாருக்கும் முழு சம உரிமை இருக்கவேண்டுமென்றும் முடிவு எடுத்தார்கள். ஈரோடு சுயமரியாதை மகாநாட்டிற்குத் தலைமை தாங்கிய திரு.M.R.ஜெயக்கர் "திரு. ஈ. வே. ராமசாமியார் சட்டசபை களைப்பற்றியோ அரசாங்கத்தைப்பற்றியோ கவலை கொள்ளா தவர். அவர் ஏழைகளுக்குத் தொண்டு செய்வதே தம் பிறவியின் பயன் என்று கருதி இருப்பவர். அவர் உங்கள் (சுயமரியாதை) இயக்கத்தில் இருக்கின்றார். மதத் உங்களுடைய இயக்கத்தில் ரோமன் கத்தோலிக்கக் கிறுத்தவர் களும் முகமதியர்களும் சேர்ந்திருப்பது சிறப்பாகும். தலைவர்களும் காங்கிரஸ் தலைவர்களும் செய்யமுடியாத காரியத்தை நீங்கள் செய்திருக்கிறீர்கள்' என்று பாராட்டினார். விருதுநகர் மாநாட்டிலும் இதே சம உரிமை கோரி, பொது மாநாடு முடிவுசெய்தது. விருதுநகரிலும் பெண்கள் சுயமரியாதை மாநாடு நடந்தது. மாதர்களும் பெண்களுக்கு ஆண்களைப்போல் சொத்துரிமையில் சமத்துவமளிக்கவேண்டும் என்று முடிவு செய் தார்கள். இம்மாதர் மாநாட்டில், 'வர்ணம் அல்லது சாதி ஆஸ்டல்கள் இருந்து வரும் வழக்கத்தை ஆட்சேபிப்பதுடன் அத்தகையவைகள் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு கிராண்டு முதலானவைகள் கொடுப் பதை மறுக்க வேண்டுமென்று கல்வி அதிகாரிகளைக் கேட்டுக் கொள்ளுகிறது' என்று முடிவு செய்ததை நினைவில் கொள்வோ மாக. 6 ஆண்களும் பெண்களும் சாதி பேதமின்றி தங்கள் தங்கள் மனைவி கணவர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ள முழு உரிமை அளிக்கப்படவேண்டுமென்றும், அதற்கேற்றவாறு திருமணச் சடங்குகள் திருத்தப்படவேண்டு மென்றும், திருமணச் சடங்குகள் சொற்ப பணச் செலவில் நடத்தப் பட வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டன.' தேவதாசி முறை இவற்றோடு நின்றதா பெண்களுக்கு இழைத்த அநீதி? இல்லை. விலைமாதர், சமதர்ம நாடுகளுக்கு அப்பால் காணும் கொடுமை; நெடுங்காலமாக வரும் கொடுமை. எந்த நாட்டிலும் இக்கொடுமை சமயத்தோடு தொடர்புபடுத்தப்படவில்லை. எந்த நாட்டுக் கடவுள்களும் தங்களுக்குப் பணிபுரிய என்று, பெண்கள் அணியைத்
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/147
Appearance