உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்ணுரிமைப் பணி 137 பிற்காக, நாடு தழுவிய தேவதாசி தேவதாசி முறை முறை கொடிகட்டிப் பறந்தது. மேற்கூறிய தேவதாசி முறையை ஒழிப்பதற்காகச் சட்டம் செய்ய வேண்டுமென்று, திருமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு மசோதா ஒன்றை அனுப்பி வைத்தார். அம் மசோதாபற்றி கருத்து தெரிவிக்குமாறு மாகாண அரசு பலரைக் கேட்டது. ஈ.வே. ராமசாமியையும் கேட்டது. ஈ.வே.ரா . விரிவாகக் கருத்து தெரிவித்தார். அதில் தேவதாசி முறையை ஒழிப்பதற்கு 1868ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட முயற்சிகளைச் சுட்டிக்காட்டினார். 1906, 1907ஆம் ஆண்டுகளில் பல மாகாண அரசுகளும் இக்கொடுமையை ஒழிக்க முடிவெடுத்துக் காட்டியதைக் கோடிட்டுக் காட்டினார். 1912ஆம் ஆண்டு, இந்திய சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் மாணிக்ஜி தாதாபாய், முதோல்கர், மேட்கித் ஆகியோர் இத்தகைய மசோதாவைக் கொண்டுவந்ததை நினைவுபடுத்தினார். இதைப் பொதுமக்கள் ஆதரித்ததால், இந்திய அரசே 1913ஆம் ஆண்டு செப்டம்பரில் ஒரு மசோதா கொண்டுவந்ததைக் குறிப்பிட்டுக் காட்டிய, ஈ. வே. ரா. அதற்கு பொதுவாக ஆதரவு இருந்தபோதிலும் சில சில்லறை விஷயங்கள்பற்றிய கருத்து வேறுபாடுகளால் தடைப்பட்டது என்று நினைவூட்டினார். மீண்டும் 1922ஆம் ஆண்டு டாக்டர் கோர் கொண்டுவந்த மசோதா 1924ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்ட வரலாற்றை நினைவுபடுத்தினார். தேவதாசி ஒழிப்பு முயற்சியின் வரலாற்றைப் படம் பிடித்துக் காட்டிவிட்டு, 'இந்த நாள்பட்ட கொடிய சமூகக் கொடுமையை ஒழிக்க யாருக்கும் ஆட்சேபமோ எதிர் அபிப்பிராயமோ இருக்க முடியாது. தேவ தாசி என்ற ஒரு வகுப்பு இருப்பது இந்து சமூகத் திற்கே இழிவானதும் அல்லாமல் இந்து மதத்திற்கே பெரும் பழி யாகும். ஒரு தனிப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் இழிவு பெண் ணுலகத்திற்கே ஏற்பட்டதாகுமாகையால், இவ்வழக்கம் பெண் களின் அந்தஸ்தையும் கவுரவத்தையும் பெரிதும் பாதிக்கக்கூடிய தாய் இருக்கின்றது. அன்றியும் ஒரு குறிப்பிட்ட சாதியையோ சமூகத்தையோ விபசாரத்திற்கு அனுமதி கொடுப்பதும் பின்னர் அவர்களை இழிந்த சமூகமாகக் கருதுவதும் பெரும் சமூகக் கொடுமையாகும். சிறு குழந்தைகளில் இருந்து துராச்சார வழி களில் பயிற்றுவிப்பது ஜன சமூக விதிகளையே மீறிய தாகும்' என்று அழுத்தந்திருத்தமாகக் கருத்தினைத் தெரிவித்து, பொட்டுக் கட்டு வதைத் தடுக்கும் சட்டத்திற்கு நாடறிய ஆதரவு கொடுத்தார். மேலும், கோவில்களில் கடவுள்கள் பெயரால், பெண்களுக்குப் பொட்டுக் கட்டி அவர்களையே பொது மகளிர்களாக்கி, நாட்டில்