உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயல்நாட்டுப் பயணங்கள் 146 உரையாற்றினார். ஒவ்வொரு கூட்டத்திலும் நெடுந்தொலைவி லிருந்து, தோட்டத் தொழிலாளர்களும் பிறரும் வந்து கலந்து கொண்டார் அப்பொதுக் கூட்டங்களுக்கு, மலேயாவாழ் சீனர்கள், சப்பானியர், மலேயாக்காரர்கள் ஆகியோரும் திரளாக வந்தார்கள். மலேயச் சுற்றுப்பயணத்தின்போது பெரியார், பொதுவாக சுயமரியாதைப் பிரச்சாரம் செய்தாலும் குறிப்பாக இரண்டொரு கருத்துக்களை பொதுமக்கள் முன்வைத்தார். மக்கள் வாழ்வுக்கு இன்றிமையாத உழுதல், நெய்தல், வீடு கட்டல், உடை வெளுத்தல், சவரம் செய்தல், தெருப் பெருக்கல் ஆகிய தொழில்களைச் செய்தவர்களை இழிவாக நடத்துவதால் அல்லவா, இந்தியாவை விட்டு பர்மாவுக்கும், இலங்கைக்கும், மலேயாவுக்கும், இதர நாடுகளுக்கும் தமிழர்கள் இலட்சக்கணக் காகப் போகவேண்டிய நிலை ஏற்பட்டது. வந்த இடத்தில் சாதி ஏற்றத் தாழ்வுகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது' என்பதை பெரியார் வலியுறுத்தினார். தமிழர்கள் கல்வி அறிவு பெறவேண்டுமென்பதை பல கூட்டங் களில் வற்புறுத்தினார். படிப்பு பெறத் தவறிவிட்டதால்தான் எண்ணற்ற தமிழர்கள் வெறும் பாட்டாளிகளாக அவதிப்பட நேர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, தொழிலாளர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கல்வி புகட்டத் தவறக்கூடாது என்று பெரியார் எடுத்துரைத்தார். மலேயாவாழ் தமிழர்கள் தங்களுக்குள் ஒற்றுமையை வளர்த்துக் கொள்ளவேண்டுமென்றும் அந்நாட்டில் வாழும் மற்ற இன மக்களோடு ஒன்றி கலந்து வாழவேண்டியதன் முன்னுரிமையையும் பெரியார் அறிவுறுத்தினார். 26-12-1929 அன்று சிங்கப்பூரில் நடைபெற்ற மலேயா இந்திய சங்க மாநாட்டில் உரையாற்றியபோது இந்த மாநாடு எங்கள் நாட்டுக் காங்கிரசைப் பின்பற்றாமல், அரசாங்கத்தை உத்தியோகமும், பதவியும் கேட்காமல், நாட்டின் நலனுக்கும் பொதுமக்களின் நன்மைக்குமான முறையில் ஆட்சி செலுத்தும்படி அவர்களைக் கட்டாயப்படுத்தும்படியான முறையில் நடந்து கொள்ளவேண்டும். அதற்கு வழி, மக்களை ஒன்றுபடுத்தி, அவர்க ளுடைய அறிவையும் சுயமரியாதையையும் உண்டாக்குவதே தவிர உத்தியோகங்களை இந்திய வேண்டுமென்பதல்ல என்பதே என் கருத்து. மயமாக்க இந்தியர்கள் என்பவர்களாகிய நாம் ஒரு மதம், ஒரு சாதி, ஒரு வகுப்பு, ஒரு கொள்கை, ஒர் இலட்சியம் என்று சொல்லிக் 10