உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 புரட்சியாளர் பெரியார் அப்போது, 'தோழர்களே! இந்தியர்களாகிய எங்களை நீங்கள் ஒரு பரிகசிக்கத் தகுந்த சமூகமாகக் கருதலாம். ஆனால், நாங்கள் பிரிட்டிஷ் தொழில் கட்சியை மிக மிகப் பரிகசிக்கத்தக்க விஷயமாய்க் கருதுகிறோம் என்பதைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். ஏனெனில் தொழில் கட்சித் தலைவராகிய தோழர் லான்ஸ்பரி அவர்கள் சிப்பாய்கள் சுடுவதையும் கொல்லுவதையும் தாம் சிறிதும் விரும்புவதில்லை என்று பெருமை பேசிக்கொள்ளுகிறார். ஆனால் எங்கள் கார்வாத் (Gharwath) சேனைகள் நிராயுதபாணி களான மக்களைச் சுடுவதற்கு மறுத்ததற்குத் தோழர் லான்ஸ் பரியின் தொழிற்கட்சி கவர்ன்மென்ட்டானது அந்தச் சிப்பாய் களுக்கு 15 வருஷ கடின காவல் தண்டனை விதித்திருக்கிறது என் பதை ஞாபகப்படுத்துகிறேன். தொழிலாளர் சங்கமாகிய டிரேட் யூனியனை ஆதரிப்பதாகவும், அதில் சேர்ந்து உழைப்பதாகவும் பறைசாற்றுகிறீர்கள். ஆனால் எங்கள் ஏழை இந்திய சுரங்க வேலைக்காரர்களும், மற்ற தொழி லாளிகளும் சேர்ந்து, ஒரே டிரேட் யூனியன் சங்கம் ஸ்தாபித்த தற்காக அதன் அதிகாரிகளையும், அதற்கு உதவிசெய்த பிரிட்டிஷ் தோழர்களையும் வெளியில் இருக்கவிடாமல் உங்கள் தொழில் கட்சி அரசாங்கமானது மீரத்து சிறையில் அடைத்துப் போட்டு விட்டது. 'தோழர் லான்ஸ்பரி அவர்கள் இந்தியர்கள் விஷயத்தில் மிக்க அனுதாபமிருப்பதாகவும், இந்தியர்கள் சுடப்படுவதையும், அடிக் கப்படுவதையும், சிறையில் அடைக்கப்படுவதையும் தாம் விரும்புவதில்லை என்றும் சொல்லிக்கொள்வதாகக் கேள்விப் பட்டேன். ஆனால் தோழர் லான்ஸ்பரியுடைய தொழில் கட்சி அரசாங்க கேபினட்டானது சுமார் 80,000 பேர்வரை இந்திய ஆண் பெண்களை ஜெயிலில் அடைத்திருக்கிறது. ஆயிரக்கணக் கான மக்களைச் சுட்டுத் தள்ளிக்கொண்டிருக்கிறது. 'ஆப்ரிக்க கிராமங்களின்மீது ஆயிரக்கணக்கான தடவை ஆகாயப் படைமூலம் கொடுமை செய்யப்பட்டிருக்கிறது. 'நூற்றுக்கணக்கான பர்மியர்களையும் கிராமத்தாரையும் சுட்டுக் கொன்று இருக்கிறார்கள். இதற்கு என்ன பதில் சொல்லுகிறீர் கள்? 'இந்தியச் சுரங்கங்களில் 10 மணி நேர வேலைக்கு 8 அணா கூலிக்கு இந்தியர்களிடம் வேலை வாங்கப்படுகின்றது. சுமாக்