உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 புரட்சியாளர் பெரியார் தீங்குகளை பட்டாங்கமாகச் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இது, பெரியாரின் தனிப் பண்பாகும். பர்மாவில் பெரியார் இருபத்து இரண்டு ஆண்டுகளுக்குப்பின் பெரியார் மீண்டும் வெளி நாடு சென்றார். 3-12-1954இல் பர்மாவில் நடந்த உலக பவுத் தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள பெரியார் போயிருந்தபோது, அம்பேத்கார் அவர்கள் பெரியாரைப் பார்த்து, 'என்ன ராம சாமி, நாம் இப்படிப் பேசிக்கொண்டே இருப்பதால் என்ன பலன் ஏற்படமுடியும்? வாருங்கள், நாம் இரண்டுபேரும் புத்த மதத்தில் சேர்ந்துவிடுவோம்!' என்றார். பெரியார் 'ரொம்ப சரி; இப்போது முதலில் நீங்கள் சேருங்கள்; நான் இப்போது சேருவது சேருவது என்பது அவ்வளவு ஏற்றதல்ல. ஏனென்றால், தமிழ் நாட்டில் நான் இப்போது சாதி ஒழிப்பைப் பற்றித் தீவிரமாகப் பிரச்சாரம் செய்துவருகிறேன். இந்துக் கடவுள்கள் எனப்படும் விநாயகர், இராமன் சிலைகளை உடைத் தும், படங்களை எரித்தும் இந்து மதத்திலுள்ள பல விஷயங்களைப் பற்றியும் மக்களிடம் எடுத்துச்சொல்லி, இப்போது பிரச்சாரம் செய்வதுபோல் அப்புறம் நான் செய்யமுடியாது; ஒரு இந்துவாக இருந்துகொண்டு இப்படிப் பேசுவதனால் என்னை யாரும், 'நீ அதைச் சொல்லக்கூடாது' என்று தடுக்க உரிமை கிடையாது. ஆனால் நான் இன்னொரு மதக்காரனாக இருந்தால், அப்படிப் பட்ட வசதி எனக்கிருக்க முடியாது. ஆகவே, நான் வெளியி லிருந்துகொண்டு புத்த மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்து வரு கிறேன்' என்று பதில் கூறினார்.