உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிப்பூட்டும் கிளர்ச்சிகள் 157 கள் இல்லை. பள்ளிகள் இருந்த ஊர்களிலும் எல்லோரும் பள்ளி சேரவில்லை; சேர்ந்தவர்களில் சிறுபான்மையினரே ஒழுங்காகச் சென்றார்கள். முதல் வகுப்பில் உள்ளவர்களில் நான்கில் ஒரு விழுக்காட்டினராவது நான்கு, அய்ந்தாம் வகுப்பில் இருந்தால் மட்டுமே அங்கீகாரம், மானிய உதவி; சில ஆதி திராவிடர்களாவது இல்லாத பள்ளிக்கு அங்கீகாரமும் இல்லை, மானியமும் இல்லை. இப்படியான விதிமுறைகள் 1950இன் முடிவு வரையிலும் இருந்தன. இருந்து பயன் என்ன? பல விதிமுறைகளைப் போன்று மேற்கூறிய விதிகள் ஏட்டில் இருந்தன. சிலவேளை, ஆய்வாளர்கள் அவற்றைக் காட்டி பள்ளிக்கூட ஆசிரியர்களை, நிர்வாகிகளை மிரட்டுவதற்குத் துணையாயின. பையன்கள் சேர்க்கையைவிட பெண்கள் சேர்க்கை மிகக் குறைவு. இப்படிப்பட்ட இருண்ட, இருளைவிட்டு வெளிவர மறுத்த, சூழ் நிலையில், கல்வி வளர்ச்சிக்கு, கல்வித்துறையைவிட, தன்மான இயக்கமே அதிகம் பாடுபட்டு வந்தது. செங்கற்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை மாநாட்டிலேயே, பொது நிதியிலிருந்து தொடக்கக் கட்டாயக் கல்வி கொடுக்க வேண்டும். மற்ற வகுப்புப் பிள்ளைகளுக்குச் சமமாக கல்வி அடைகிற வரையிலும் தீண்டா தவர்களுக்கு இலவச பாட நூல்கள், உண்டி, உடை முதலியவற்றை இலவசமாக அளிக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அடுத்து வந்த மாகாண மாநாடுகளிலும் மாவட்ட, வட்ட மாநாடுகளிலும் இத்தகைய முடிவுகள் அடுத் தடுத்து ஏற்கப்பட்டன. இவற்றைத் தன்மான இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், பொது மேடைகளில் விளக்கி, ஆதரவு திரட்டி னார்கள். இருந்தும் போதிய பலன் கிட்டவில்லை. ஆங்கிலேயர் ஆட்சியும் கல்வியைப் பரவலாக்கவில்லை. தன்னாட்சி பெற்ற பிறகும் காங்கிரசு ஆட்சி, போதிய, பயனுள்ள, கல்வி வளர்ச்சித் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை. காமராசர், சென்னை மாநில முதல் அமைச்சரானது பார்ப்பன ரல்லாதாரருக்குக் கல்வியின் பொற்காலமாக அமைந்தது. எல்லார்க்கும் கல்வி', 'எல்லார்க்கும் பதவியில் உரிய பங்கு' என்பதில் காமராசர், பெரியாரைப் போன்றே உறுதியாக இருந் தார். அவருடைய பொற்காலத்தில் 16,000 தொடக்கப்பள்ளிகள், 30,000 ஆகப் பெருகின. அவற்றில் படிப்போர்க்கு இலவசக் கல்வி, இலவச உணவு, இலவச சீருடை, இலவச பாட நூல்கள் வழங்கப்பட்டன. ஆசியாவில் முதலாவதாக, உள்ளூர் மக்கள் உதவியோடு பதினைந்து இலட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசப் பகல் உணவு அளிக்கப்பட்டது.