174 புரட்சியாளர் பெரியார் 'மன்னிக்கவேண்டும்; தேவைப்பட்டால், இன்னும் பணம் கொடுக்கலாம்' என்று சொல்லிவிட்டு, பெரியார் விடைபெற்றுக் கொண்டார். பெரும் வாய்ப்பு இழப்பு திரும்பிப் போகும்போது, என்னை தன் வண்டியில் வரும்படி அழைத்தார். அதில் இருவரும் பயணம் செய்யும்போது, 'மதுரைப் பல்கலைக் கழகம் அமைப்பதற்கு இடையூறு இல்லா தபடி திருச்சியிலும் ஒரு பல்கலைக் கழகம் நிறுவுவதானால், இருபத் தைந்து இலட்சம்போல் நான் கொடுக்கலாமென்று முதல் அமைச்ச ரிடம் தனியாகச் சொல்லுங்கள்' என்று பெரியார் கட்டளை யிட்டார். அச் செய்தியை உரியவரிடம் சேர்த்துவிட்டேன். மீண்டும் சில ஆண்டுகளுக்குப்பின், இதே செய்தியை பெரியார் சார்பில் கொண்டுபோய்ச் சேர்த்தேன். பயன்படுத்திக்கொள்ள வில்லை. தமிழர்கள், தும்பைவிட்டு வாலைப் பிடிப்பதில், உலகப் பரிசுக்கு உரியவர்கள் ஆயிற்றே! சிக்கனக்காரராகிய பெரியாரின் நிதி உதவி கல்லூரி அமைக்க மட்டுமே என்று எண்ணிவிடக்கூடாது. சமூக வளர்ச்சிக்கும் கை கொடுத்தது. திருச்சி பொது மருத்துவ மனையில் குழந்தைகள் பகுதிக்குக் கட்டடம் அமைக்க, பெரியார் ரூபாய் ஒரு இலட்சம், நன்கொடை வழங்கினார். அவர், ஈரோடு, அரசினர் மருத்துவ மனையில், புது கட்டடம் கட்டவும் ஒரு இலட்சம் ரூபாய் வழங்கினார். எத்தனைக் கலப்புத் திருமணங்களுக்கு சீர்திருத்தத் திருமணங் களுக்கு பெரியார் பணஉதவி செய்துள்ளார்! பெரியாரால் அல்லவா பல்லாயிரம் புரட்சியாளர்கள் தலை நிமிர்ந்து நடக்கிறார்கள் என்பதை, நன்றியோடு நினைப்போர் ஏராளம். என் ஒருவனுக்கே, பெரியார் தம் பணத்தில், 'நெ.து. சுந்தர வடிவேலு பகுத்தறிவுப் பரிசு'க் கட்டளையை ஈரோடு சிக்கைய்யா கல்லூரியில் நிறுவியதை எண்ணினால், உள்ளம் உருகுகிறது. தந்தை பெரியார் தன்னலமின்றி வாழ்நாள் முழுவதும் பொது நலம் பேணும் தலைவராக விளங்கினார். அரசியல் நாகரிகத் திற்கு தலை சிறந்த எடுத்துக்காட்டாக மிளிர்ந்தார். வன்முறைக்கு இடம்கொடாது பொது நலம் பேணினார்.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/186
Appearance