உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 புரட்சியாளர் பெரியார் “டாக்டர் சி. இராசகோபாலாச்சாரியாருக்கு நாளைக்கும் கறுப்புக்கொடி பிடிக்கச் செய்யவேண்டியவனாக நான் ஆனாலும் அவரிடத்தில் சொந்தத்தில் சிறிதாவது வெறுப்போ, தோஷமோ அல்லது அன்புக்குறைவோ, மதிப்புக்குறைவோ எனக்கு உண்டு என்று அவராவது வேறு யாராவது சொல்லமுடியுமா? இன்றுதா னாகட்டும். எனது அரசியல் கொள்கை என்பதுகூட திராவிடநாடு, வடநாட்டான் ஆதிக்கத்திலிருந்து அரசியலிலும் பொருளாதாரத்தி லும் பிரிந்து, பர்மா, சிலோன்போல, ஒரு தனி சுதந்திர நாடாக இருக்கவேண்டுமென்பதைத் தவிர மற்றபடி காங்கிரசு அரசியல் கொள்கையில், திட்டத்தில் நான் எதற்கு விரோதி? இந்த திட்டத்திலும் என்னிடம் இரகசிய முறை இருக்கிறதா? என் விஷயத்தில் இதுவரை பார்ப்பன ஆதிக்க மந்திரிகளால் செய்யப்படாத காரியங்களை நீங்கள் செய்தீர்கள். அவர்கள் அனுமதித்துவந்த காரியங்களை நீங்கள் தடுத்தீர்கள். அவர்கள் காட்டிய சலுகையைக்கூட நீங்கள் காட்ட மறுக்கிறீர்கள்?' இது ஒளிமறைவில்லாத உண்மையான ஊடுருவியப் படப்பிடிப்பு ஆகும். பெரியார் தனிப்பட்டமுறையில் எவருக்கும் பகைவரல்லர்; எவரிடமும் வெறுப்பு உடையவர் அல்லர்; இரகசியத் திட்டம் தீட்டு பவர் அல்லர்; நாட்டை அன்னியனுக்குக் காட்டிக் கொடுத்தவர் அல்லர்; இப்படிப்பட்ட பெரியார், ஏன் நாள்தோறும் மணி தோறும் பகைப் புயலை, தூற்றல் மண்மாரியைக் கடக்க நேர்ந்தது? பெரியார் சொற்களாலேயே விளக்கம் பெறுவோம்: 'சகோதரிகளே! நமது கொள்கை வருணாச்சிரம தர்மத்திற்கும் முதலாளி தத்துவத்திற்கும் விரோதமானதேயாகும். மேலும், அவற்றிற்கு அனுகூலமாயிருக்கும் கடவுள், மதம் என்பனவாகிய வற்றிற்கும் விரோதமேயாகும். இன்னும் எங்குபோய் நிற்கும் என்று என்னாலேயே சொல்லமுடியாது. ஆகவே, நீங்கள் எதற் கும் உங்கள் பகுத்தறிவை தைரியமாய் உபயோகியுங்கள்' என்று பெரியார் தெளிவுபடுத்தியதை 11-10-1931 நாளைய குடி அரசில்' காணலாம். மற்றோர் சமயம் தந்தை பெரியார் கூறியவற்றைப் படிப்போம்: 'ஈ.வே.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல், மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற் போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். 6 அத்தொண்டு செய்ய எனக்கு “யோக்கியதை" இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராத