பெரியாரின் தனித்தன்மை 191 சாதிப் பிள்ளைகளும் ஒன்றாக, உட்கார்ந்து உண்ணும் பழக்கத்தை யும் வளர்த்தது. அதோடு நிற்காமல், பள்ளிகளைச் சீரமைப்பதற்கு வேண்டிய தளவாடங்கள், துணைக் கருவிகள், பாட நூல்கள், விரிந்த படிப்பிற்கான நூல்கள், பலவேளை பள்ளிக் கட்டடங் களையும் உள்ளூர் மக்கள், தனித்தனியாகவோ, கூட்டாகவோ, கொடுப்பதற்கு ஏற்பாடு செய்வதில், போட்டி போட்டுக்கொண் டிருந்த காலம் அது. அப்போது சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில், பள்ளிச் சீரமைப்பு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அக்கால கட்டத்தில், இந்தியப் பேரரசில், இரயில்வே இராச்சிய அமைச்ச ராக இருந்த திரு. எஸ். வி. ராமசாமி, இந்தியப் பேரரசின் கல்வி அமைச்சராக இருந்த டாக்டர் ஸ்ரீமாலி என்பவரை அம் மாநாட்டுக்கு அழைத்துவந்தார். சென்னை மாநிலக் கல்வி அமைச்சர் திரு. சி. சுப்ரமணியமும் அம் மாநாட்டில் பங்குகொண் டார். எனவே, பொதுக் கல்வி இயக்குநராக இருந்த நானும் அவர்களோடு மாநாட்டுக்குச் சென்றேன். தாரமங்கலத்திற்குப் புறப்படுவதற்குமுன், சேலம் சந்திப்பில், இரயில்வே அமைச்சரின் தனிப் பெட்டியில் கூடினோம். அப்போது சேலம் காங்கிரசார் பலர், அங்கு வந்து அமைச்சர்களுக்கு மாலை சூட்டினார்கள். சேலம் நகராட்சி மண்டபத்தில் முதல் அமைச்சர் காமராசரின் படத்தைத் திறந்து வைத்த நிகழ்ச்சி நன்றாக நடந்ததா என்று கல்வி அமைச்சர் சி. சுப்ரமணியம் கேட்டார். வந்தவர்கள்: 'வெகு சிறப்பாக நடந்தது. திருவுருவப் படத் தைத் திறந்து வைத்த பெரியார் அருமையாகப் பேசினார். பெரியாரை அழைத்தவுடன் இசைவு தந்தார்.' அழைப்பிதழ் அச்சிட்டபோது, வழக்கம்போல, நிகழ்ச்சி நிரலில் 'கடவுள் வாழ்த்து' என்று முதலில் குறித்திருந்தார்கள். அழைப்பினைப் பெற்ற ஒரு நண்பர், நகராட்சித் தலைவரிடம், 'பெரியார் கலந்து கொள்ளும் இந்நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்து வைத்திருக்கிறீர் களே! பெரியார் கோபப்பட்டு, கடவுள் மறுப்புப் பேச்சாகவே முழு வதும் பேசிவிட்டால் என்ன செய்வது?' என்று அச்சுறுத்தினார். விழாவிற்கு ஏற்பாடு செய்தவர்கள், கலந்து பேசினார்கள். பெரியாரை, நகரமன்றத் தலைவர் அறைக்கு அழைத்துப்போய் உட்காரவைத்துவிடுவோம். விழா மண்டபத்தில் கடவுள் வாழ்த்து பாடிய பிறகு, பெரியாரை மண்டபத்திற்கு அழைத்து வருவோ மென்று முடிவு செய்தார்கள். தந்திரம் பலிக்கவில்லை. று
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/203
Appearance